தலித் மாணவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்காமல் அவர்களை அலைகழித்தனர்! - தீபா மோகனன், முனைவர் படிப்பு மாணவி
தீபா மோகனன் |
தீபா மோகனன்
கேரளாவின் கோட்டயத்திலுள்ளது, காந்தி பல்கலைக்கழகம். இங்கு பத்தாண்டுகளாக சாதி ரீதியான புற்க்கணிப்பு நடைபெற்றுள்ளது என உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தீபா மோகனன். இவர் அங்கு பிஹெச்டி படிக்கும் மாணவி. பதினொரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை பணிய வைத்திருக்கிறார்.
தீபா மோகனன் |
பல்கலைக்கழகங்களில் உள்ள ஜாதி பிரச்னைகளை எப்படி தீர்ப்பது?
ஜாதி ரீதியான பிரச்னைகள் அனைவரும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும். நான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுவரை எட்டு புகார்களை அளித்துள்ளேன். விசாரணையை தாமதம் செய்ய விசாரணைக் குழுக்களை அமைப்பார்கள். அப்புறம் அது அப்படியே நின்றுவிடும். இதில் சில புகார்களின் தாமதத்திற்கு நீதிமன்றமும் காரணமாக உள்ளது. பத்தாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறேன். அதனை நீர்த்துப்போகும் விஷயங்களை நிர்வாகத்தினர் செய்து கொண்டே இருந்தனர்.
தீபா மோகனன் |
பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் கொடுத்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் இன்னு்ம் துறையில் இருக்கிறார்கள். எனக்கு அங்கு செல்லவே பயமாக இருக்கிறது. உண்ணாவிரதம் காரணமாக நான் உடல் அளவில் பலவீனமாக இருக்கிறேன். பின்னர்தான். இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்.
உங்களது பிஹெச்டி படிப்பை ஏழு ஆண்டுகளாக முடிக்கவில்லையே ஏன்?
நான் எனது எம்.பில் படிப்பை 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் முடித்தேன். ஆனால் அதற்குப் பிறகு மார்ச் 2014இல் பிஹெச்டி படிப்பிற்கான அனுமதி கிடைக்கும்வரை ஏராளமான வேலைகளை பேராசிரியர்கள் செய்ய வைத்தனர். பல்வேறு உலக மாநாடுகள், ஆராய்ச்சிக்கட்டுரை வேலைகள், அதனை மதிப்பீடு செய்தல் என வேறுவகையிலான தொல்லைகள் சுரண்டல்கள் இருந்தன. இதனால் எனது ஆராய்ச்சிப்படிப்பைத் தவிர்த்த விஷயங்களை செய்யவேண்டியிருந்தது. எனது ஆய்வகத்திற்கான அறிக்கையைக் கூட என்னால் பெறமுடியவில்லை. இன்னொரு சக மாணவரிடமிருந்துதான் கடனாகப் பெற்றேன். அதற்கு பேராசிரியர். ஐம்பது பேர் முன்னிலையில் என்னை திருடி என்று பேசினார். மாணவியாக இருந்தாலும் கூட மையத்தில் என்னை உட்காரக்கூட விடவில்லை.
ஜாதி ரீதியான பிரச்னைகள் உங்களுக்கு எப்படித் தொடங்கின?
எனக்கு மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் நானோசயின்ஸ் அண்ட் நானோடெக்னாலஜியில் எம்பில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தலித் மாணவர்களுக்கு இந்தபடிப்பில் ஆறுமாத டிப்ளமோ மட்டும்தான் இருந்தது. ஆனால் பிற ஜாதி மாணவர்களை உடனே இதில் அனுமதித்தவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. டாக்டர் நந்தகுமார் கலேரிகல் இணை இயக்குநராக வந்து இப்போது இயக்குநராக மாறியுள்ளார். இவர், எங்கள் தலித் மாணவர்களுக்கான புராஜெக்ட் பணிகளுக்காக வசதிகளை மறுத்து வந்தார். பல்கலைக்கழக இயக்குநரிடம்(சாபு தாமஸ்) புகார் கொடுத்தபிறகு புராஜெக்ட் செய்ய முடிந்தது. இதுபோன்ற காரணங்களால் என்னால் எம்பில் படிப்பை சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. அதனை முடித்து சமர்ப்பிக்கும்போது நிர்வாகத்தினரால் நிராகரிக்கப்பட்டது. பிறகு இன்னொரு புராஜெக்டை உருவாக்கி சம்ர்ப்பித்தேன். என்னோடு படித்த தலித் மாணவர்கள் நிர்வாகத்தினரின் ஜாதி ரீதியான தொல்லைகளை பொறுக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு செ்ன்றுவிட்டார். எம்பில் படிப்பை முடித்தபிறகும் கூட எனக்கு சான்றிதழை தராமல் நிறுத்திவைத்தனர். கேட் தேர்வு எழுதி வென்றபிறகே எனது பிஹெச்டி படிப்பிற்கான அனுமதி கிடைத்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஜெய்கிருஷ்ணன் நாயர்.
கருத்துகள்
கருத்துரையிடுக