விவசாயிகளின் மீது காற்று மாசுக்கு குறை சொல்வது தவறு1 - வித்யுத் மோகன், கண்டுபிடிப்பாளர்

 

 

From Bengaluru's RVCE to £1m Earthshot Prize: Meet Vidyut Mohan and his  company Takachar
வித்யுத் மோகன் - டகாசார்

1280 × 960

 

வித்யுத் மோகன்


கண்டுபிடிப்பாளர்


அண்மையில் விவசாய கழிவுப்பொருட்களை உரமாகவும், எரிபொருளாகவும் மாற்றும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவரின் கண்டுபிடிப்பு பற்றியும் சூழல் பற்றியும் பேசினோம்.


நீங்கள் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு சூழல் தொழில்நுட்பம் பற்றி படித்துள்ளீர்கள் காற்று மாசுபாடு பற்றிய கவனம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?


நான் டெல்லியில்தான் பிறந்து வளர்ந்தேன். அங்கு காற்று மாசுபாடு அதிகரித்தபோது, அதனால் நானும் எனது குடும்பமும், நண்பர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டோம். 2015-16 காலகட்டத்தில் காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது. இதில் பட்டாசுகளின் பங்கும் இருந்தது. குறிப்பாகவ விவசாய கழிவுகளை அதிகம் எரிப்பதால் 30 சதவீதம் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. எனவே நான் கல்லூரியில் இதுபற்றி படித்தேன். அப்போதே விவசாய கழிவுகளிலிருந்து வரும் கார்பன் அளவை கட்டுப்படுத்த்தவேண்டும். கிராம மக்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.


விவசாய கழிவுகளை எரிப்பது என்றாலே அது பஞ்சாப், ஹரியாணா பற்றியது என்று கூறுகிறார்கள்?


ஊடகங்கள் அப்படியான கருத்துகளை கூறுகிறார்கள் அது உண்மையல்ல. வட இந்தியா முழுக்கவே அறுவடைக்குப் பிறகு விவசாய கழிவுகளை நெருப்பு வைத்து எரிக்கிறார்கள். இது இந்தியா முழுக்கவுமே உள்ளது. இதனால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்திய மாநிலங்கள் பலவற்றிலுமே கூட காற்றின் தரம் சரியாக இல்லை. அரிசி, கோதுமை, பருத்தி, சோளம் என பல்வேறு பயிர்களும் இப்படித்தான் அறுவடைக்குப் பிறகு எரிக்கப்படுகின்றன.


விவசாயிகளை இதற்காக குறை சொல்லலாமா?


அரிசி விவசாயிகளுக்கு கழிவுகளை எரித்தால் அதிக புகை வரும் என்று தெரியும். ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. அதனை எரித்தால்தான் அடுத்த பயிரை உடனே பயிர்செய்ய முடியும் என்பதால் நெருப்பை நாடுகிறார்கள். நடைமுறைரீதியாக மாசுபாட்டைக் குறைக்கும் வேறு வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடையாது.


கழிவுகளை வேறுவழியில் மடை மாற்றுவதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுத்தானே உள்ளன. ஏன் அவை பரவலாகவில்லை?


ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயந்திரங்கள் நீங்கள் சொல்லும்படி அனைத்து விவசாயீகளுக்கும் பரவலாக கிடைக்கவில்லை. அடுத்து, இருபத்தைந்து நாட்களில் 20 மில்லியன் டன்கள் கழிவுகள் வந்தால் அதனை இயந்திரங்களால் முழுமையாக சமாளிக்க முடியாது. இதனை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இயந்திரங்களை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு விவசாயிகளிடம் பணம் இல்லை. எனவே, அவர்கள் பாரம்பரியமாக நெருப்பை நாடுகிறார்கள். எனவே இதற்கு அவர்களை குறை சொல்வது சரியானது அல்ல.


நீங்கள் உருவாக்கி இயந்திரம் பற்றி சொல்லுங்கள்.


நான் உருவாக்கிய இயந்திரம் சிறிய அளவிலான கழிவுகளை உரமாகவும், எரிபொருளாகவும் மாற்றும். காபிக்கொட்டைகளை வறுக்கும் முறையில் கழிவுகள் வறுபடுகின்றன. இ்ம்முறைக்கு டோரிபேக்‌ஷன் என்று பெயர். இது பிரெஞ்சிலிருந்து வந்த வார்த்தை. விவசாயிகளுக்கு இம்முறையில் கழிவுகளின் மூலம் சிறியளவிலான வருமானம் கிடைக்கும்.


இதனை சோதித்து பார்த்துள்ளீர்களா?


ஹரியானாவிலும், தமிழ்நாட்டிலும் சோதித்துப் பார்த்தோம். ஹரியானாவில் வைக்கோலை பயன்படுத்தினோம். தமிழ்நாட்டில் தேங்கா்ய் தொட்டிகளை பயன்படுத்தினோம். தொட்டிகளை வறுத்து அதனை மாற்றி நீர் சுத்திகரிப்புக்கு பில்டராக பயன்படுத்தினோம். விவசாயிகளின் தேவை பொறுத்து பல்வேறு பயிர்களை இதில் பயன்படுத்தலாம்.


காட்டுத்தீ பாதிப்பு அதிகரித்து வருகிறது. உங்கள் இயந்திரத்தை இதைத் தடுக்க பயன்படுத்த முடியுமா?


அமெரிக்கா, துருக்கி, இத்தாலி ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காடுகளில் உருவாகும் கழிவுகளால் காட்டுத்தீ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை இந்த இயந்திரம் மூலம் குறைக்கலாம். இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இயந்திரத்தை சோதித்து பார்த்துள்ளோம். கழிவுகளை எரிபொருளாக மாற்றுவதால் வருமானமும் கிடைக்கும்.


டைம்ஸ் ஆப் இந்தியா

சோனம் ஜோஸி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?