இடுகைகள்

கையெழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கையெழுத்து - விநோதரச மஞ்சரி

படம்
  துணுக்குகள்   தன் கையெழுத்துக்கு கீழே ஒருவர் உருவாக்கும் குறியீடு அல்லது அடையாளத்திற்கு பாரப் (Paraph) என்று பெயர். அமெரிக்க   வரலாற்றிலேயே அரசியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி புகழ்பெற்றவர், ஜோசப் கோசெய் (Joseph Cosey). இவர், முன்னாள் அமெரிக்க அதிபர்   ஆபிரகாம் லிங்கன், கவிஞர் மார்க் ட்வைன் தொடங்கி அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தை எழுதி வெளியிட்ட தாமஸ் ஜெஃபர்சன் வரை போலி கையெழுத்துகளை உருவாக்கினார். பின்னாளில், ஜோசப்பின் போலி கையெழுத்துகள், சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட வினோதமும் நடந்தது. அமெரிக்காவின் சிகோகோவைச் சேர்ந்த நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர்   நெல்சன் ஆல்கிரென் (Nelson Algren), தனது புத்தக வாசகர்களுக்கு கையெழுத்து போடும்போது கூடவே பூனையின் படத்தையும் வரைவது வழக்கம். 1948ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்துகளை சேகரிப்பதற்கான முதல் அமைப்பாக‘தேசிய கையெழுத்து சேகரிப்பாளர் சங்கம்’ (National Society of Autograph Collectors) தொடங்கப்பட்டது. இதில், உறுப்பினராக விரும்புபவர் தீவிரமான வரலாற்று ஆய

தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

படம்
  தெரிஞ்சுக்கோ – விளையாட்டு   டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே. ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும். குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள். 1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற   ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது.   பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.   நூல் இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ்” என்ற நூலின் 6,904   ப

மாணவர்களிடையே தேய்ந்து வரும் எழுதும் பழக்கம்! - விளைவு என்ன?

படம்
  தேயும் எழுதும் பழக்கம்! பெருந்தொற்று காலகட்டம் மாணவர்களின் கல்வியை பின்னோக்கி நகர்த்தியது. கூடவே, எழுதும் பழக்கத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் எழுதுவதற்கு பயிற்சி தேவைப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன், கணினி, டேப்லெட், பல்வேறு ஆப்கள் என யாருக்குமே பேனாவை பிடித்து எழுதும் அவசியம் இல்லை. பள்ளிகளில்மட்டும் தான் மாணவர்கள் பல்வேறு எழுத்து வேலைகளை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களின் மனநிலை பற்றி பலரும் கவலைப்பட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளி தொடங்கியதும் எப்படி எழுதுவார்கள் என இப்போதுதான் பெற்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எழுத்துப் பயிற்சிக்கான மையங்கள் உருவாகி வருகின்றன. மும்பையில் கையெழுத்துப் பயிற்சி அளித்து வருகிறார் குன்சால் கலா. இவரது வகுப்பில், 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ளார். எழுதுவதில் சுணங்கினால் எழுத்து தேர்வுகளை நேரத்திற்கு எழுத முடியாது என்பதே பெற்றோரின் கவலை. மாணவர்கள் பலருக்கும் பேனா, பென்சிலை சரியாக விரல்களில் பிடிப்பதே மறந்

தட்டச்சு செய்வதை விட தாளில் எழுதுவது மொழியை கற்க உதவுகிறது - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன்  ஆஹா! புதிய தலைமுறை! ஜார்க்கண்ட் மாநிலத்தில் அழிந்துவரும் பட்டியலின மக்களுக்காக புரோஜெக்ட் ஆகான்ஷா எனும் கல்வித்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. டாடா பவுண்டேஷனின் திட்டத்தால் இம்மாநிலத்தில் 220 பழங்குடி மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். ”எங்களது கல்வித்திட்டம் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை  தேர்ந்தெடுக்க உதவுகிறோம்” என்கிறார் டாடா பவுண்டேஷனின் சமூக பொறுப்புணர்வு துறை தலைவர் சௌரப் ராய். https://www.newindianexpress.com/good-news/2021/aug/08/project-akansha-motivating-helping-out-pvtg-children-to-take-up-education-2342005.html காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடும் வீரர்கள்! இடம் கிரீஸ், வடக்கு ஏதேன்ஸ்  https://www.reuters.com/news/picture/photos-of-the-week-idUSRTXFA4BO அப்படியா!? இரண்டுமே ஒன்றுதான்! கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி போட்டுக்கொண்டாலும் கூட நோய்த்தொற்றைத் தடுக்க முடியும் என ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி அறிக்கை கூறியுள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 98 பேர்களிடம் ஆராய்ச்சி நடத்தி 18 பேர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும்,