கண்கள் சொல்லும் காதல் சேதி
கண்கள் சொல்லும் காதல் சேதி கண்கள் காதல் சேதியை சொல்வது பிறகு, முதலில் அதன் அடிப்படை பார்வைதான். பார்வையால் பொருட்கள் தட்டுப்படும். பழக்கம் காரணமாக கண்கள் வழியாக மூளை அதன் தகவல்களை அறிந்துகொள்ளும். மேற்படி தேவையான தகவல்களை பகுத்தாய்ந்து பார்த்து கட்டளைகளை வழங்கும். நீங்கள் ஒன்றை வாசிக்கும்போது, கணிதம் போடும்போது, தீவிரமாக யோசிக்கும்போது உங்கள் கண்களில் உள்ள பாப்பா அதற்கு ஏற்ப மாறுபாடுகளை அடையும். ஒருவரின் கண்களின் நிறம் நீலம், பச்சை, கரும்பழுப்பு, காப்பிக்கொட்டை நிறம் என அமையலாம். இதற்கு மெலனின் என்ற நிறமியே காரணம். கண்கள் நீருக்குள் உள்ள ஒரு கேமரா போல. கண்களைச் சுற்றி நிறைய நீர்மங்கள் உள்ளன. கண்கள் செயல்பட ஆறு தசைகளின் உதவி தேவை. தினசரி நாம் 9400 முறை இமைக்கிறோம். ஆறு தசைகளும் தினசரி 1 லட்சம் முறை அசைகின்றன. இரு கண்களும் இருவேறு நிறங்களில் இருக்கிறதா? வாழ்த்துகள் உங்களுக்கு ஹெட்ரோகோமியா உள்ளது. கண்களில் பார்க்கும் காட்சிகளில் உள்ள நிறங்களை பிரித்தறியும் வசதி உள்ளது. கண்களிலுள்ள நிறமிகள் வேலை செய்யாதபோது, நிறக்குருடு ஏற்படுகிறது. மனைவியின் அக்குள் மணம...