இடுகைகள்

அண்ணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரியை கொன்று குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் போலீஸ் அண்ணன், திருடன் தம்பி! மாத்தோ பெட்டுக்கோக்கு - பாலைய்யா

படம்
  மாதோ பெட்டுக்கோக்கு பாலைய்யா, ரம்பா, ரோஜா, சுஜாதா மற்றும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள்.  இயக்கம்  - கொடண்டராமி ரெட்டி  இசை - மாதவப்பெடி சுரேஷ்  கதை - பார்கவ் தயாரிப்பு நிறுவன கதை இலாக்கா 1995இல் வெளியான படம். அதைவிட பழைய காலக்கதையைக் கொண்டுள்ளது. ஒரே ஆறுதல் பாலைய்யா இரண்டு வேடங்களை போட்டு நம்மை குஷிப்படுத்துவது மட்டுமே.... அர்ஜூன் ஐபிஎஸ் அதிகாரி. அநியாயம் என்றால் காழ்ச்சி பாரேஸ்தா கொடுக்கா என பாயும் குணம் கொண்டவர். இவருக்கான இன்ட்ரோவே, வல்லுறவு செய்ய முயலும் இன்ஸ்பெக்டரை போட்டு அடித்து பிளந்து ஏறக்கட்டுவதுதான். அடிக்கிற காட்டு அடியில் சம்பவ இடத்திலேயே வல்லுறவு இன்ஸ்பெக்டர் ஏறத்தாழ கோமாவுக்கு போய்விட்ட மாதிரிதான். அப்போதுதான் உயரதிகாரி வந்து அர்ஜூனைத் தடுக்கிறார். அந்த உரையாடலில் அர்ஜூன், எனக்கு சீதாபுரம் காவல் நிலையத்தில் பதவி கொடுங்கள் என்கிறார்.  இது ஒரு பாலைய்யாவின் சீரியஸ் கதை. அதாவது அண்ணன், இன்னொரு பாலைய்யாவின் பெயர் கிட்டய்யா. இவருக்கு போங்கு வேடங்களை போட்டு திருட்டு, கொள்ளையடிப்பதுதான் ஒரே வேலை.  யாருக்கு யார் ஜோடி என்று சொன்னால் படம் பார்த்த திருப்தி தங்களுக்கு கிடைத்துவிட

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

மாற்றுத்திறனாளி தன் குறைகளை மறைத்து சாதாரண மனிதராக காதலித்து வாழ முடியுமா? வேர் ஸ்டார்ஸ் லேண்ட்? கொரிய டிவி தொடர் 2008

படம்
    வேர் ஸ்டார்ஸ் லேண்ட் sbs tv தொடர் 16 எபிசோடுகள் October 1 to November 26, 2018 Genre: Romance, Melodrama Written by: Kang Eun-kyung Directed by: Shin Woo-chul இன்ச்கான் விமானநிலையம். கதை முழுக்க இங்குதான் நடைபெறுகிறது. இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு ஆண்டாக சென்று வந்துகொண்டிருக்கிறாள் மிஸ் ஹான். வேலை பார்ப்பது சரியில்லை என இவளை மிஸ் யாங் குழுவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது மிஸ் யாங்கின் சீனியர் ஆபீசர் லீ செய்யும் வேலைதான். அவருக்கு ஹானைப் பார்க்க, தான் பயிற்சி கொடுத்த மிஸ் யாங்கை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது போலவே இருக்கிறது. ஹானைப் பொறுத்தவரை விமானங்களை நட்சத்திரமாகவே பாவிக்கிற கனவு ஜீவி. நன்றாக தூங்குவது அடித்து பிடித்து ஆபீஸ் வருவது, அங்குள்ள அலுவலகங்களை பார்த்து மிரள்வது, அனைத்துக்கும் ஸாரி கேட்டு மேனேஜர் காங்கை ரத்த அழுத்தம் வரும்படி அலறவைப்பது என ஏகத்தும் செய்கிறாள். பயணிகளின் சேவைப்பிரிவு ஹானுக்கு புதியது. அங்கு வரும்போது, லீ சூ என்பவரை சந்திக்கிறாள். லீ சூ காசு கொடுத்தால் கூட பேசாத ஆள். அவர் ஹானை முன்னமே சந்தித்த  அனுபவம் கொண்டவர். ஹானைப் பொறுத்தவரை எப்படியோ வேல