இடுகைகள்

இடதுசாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இயலாமையில் த

பிரேசிலில் பெருகும் வறுமையை, வெறுப்பை போக்குவாரா புதிய அதிபர் லுலா!

படம்
  பிரேசில் நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்!   இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இருமுறை தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்திருக்கிறார். தனது 77 வயதில் மீண்டும் அதிபராக லுலா தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் இருக்கப்பட முடியும்? என்று பார்ப்போம். தேர்தலில் வெற்றி பெற்ற சதவீதம் பெரிதாக உள்ளது என்று சொல்ல முடியாது. வலதுசாரி பிரதமரான பொல்சனாரோ 49.1 சதவீதம் பெற்றுள்ளார் எனில் லுலா பெற்றுள்ள வாக்குகளின் அளவு 50.9% ஆகும். லுலாவும் பொல்சனாரோவும் கொள்கை, செயல்பாடு அளவிலும் மிகவும் வேறுபட்டவர்கள். பொல்சனாரோ எப்படிப்பட்டவர் என்ன அமேசான் காடுகளை அழியவிட்டதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிகளின் வாழிடங்கள் வேகமாக அழிக்கப்பட்டன. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளே உருவாக்கப்பட்டன.  77 வயதான லுலா தொழிற்சங்க தலைவராக இருந்தவர். இவர் நாட்டின் அதிபராக 2002, 2010ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். லுலா அதிபராக இருந்தபோது   பல லட்சம் மக்களை வறுமை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

படம்
  வைக்கம் முகமது பஷீர் தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர் ஸாநு மாஸ்டர் தமிழில் - யூமா வாசுகி பாரதி புத்தகாலயம்  தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது.  தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம்.  இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது

டெக் நிறுவனங்களுக்கு எதிரான எதிர்மறை விஷயங்கள்! - மைக்கேல் சொலானா

படம்
  மைக்கேல் சொலானா டெக் நிறுவனங்களின் மீதான வெறுப்பு, ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான் நேர்காணல் மைக் சொலானா முதலீட்டாளர்  பேச்சாளர் டெக்லாஷ் எனும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது மக்களுக்கு மோகம் குறைந்துள்ளது. அவர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பம் அடுத்த பத்து ஆண்டுகளில் அது இப்போது உள்ள அங்கீகாரத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. எங்கு தவறு தோன்றியது என நினைக்கிறீர்கள்? ஓராண்டுக்கு முன்னர்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. ஊபர், பேஸ்புக் ஆகியவற்றுக்கு எதிரான சில புகார்களை மக்கள் எழுப்பினர். பொதுவாக அமெரிக்கர்கள் இந்த நிறுவனங்களின் சேவைகளை எப்போதும் போல பெற்றுவந்தனர். அதில் அவர்கள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. பேஸ்புக்கை குறிவைத்து பிரைவசி விஷயத்தை எழுப்பியவுடன், தாராளவாதிகள் அதனைக் கவனிக்கத் தொடங்கினர்.  சாதாரண பொதுமனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர்கள் வாங்க நினைத்த லெதர் ஷூக்களை பேஸ்புக்கில் பார்த்து அவர்களை பெரியளவு பாதிக்கவில்லை. டெக்லாஷ் எனும் தன்மை இயல்பானதல்ல. அதனை பெரிதாக உருவாக்கினார்கள். இடது பாப்புலிசவாதிகள், வலதுசா

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

படம்
இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ

இருவேளை உணவுக்காக நான் ஏராளமான வேலைகளை செய்துள்ளேன்! - எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர், அரசியல்வாதி இமான் என்று வெளியாகியுள்ள நூல் நீங்கள் எழுதிய வரிசையில் 25ஆவது நூல்தானே? இல்லை 26 ஆவது நூல். வங்காளத்தில் இந்த நூலை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். சீரா சீரா ஜீபோன் என்பது அதன் பெயர். இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இமான் என்றாகியுள்ளது.  அருணாவா சின்காவின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்துள்ள அருணாவாவின் பணி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அவர் என்னுடைய தேர் ஈஸ் கன்பவுடர் இன் தி ஏர் என்ற நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை வாசித்தவர்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். நூலின் அடிப்படை உணர்ச்சிகளை உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறன் கொண்டவர்.  நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? நான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன்.  வங்காள மொழியில் மட்டும் முதலில் உங்கள் நூல்கள் வெளியாகின. இப்போது மொழிபெயர்ப்பு காரணமாக பிற மொழிகளிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருணாவா அவர்களுக்குத

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா

மிச்சமுள்ள கம்யூனிச நாடுகள்!

படம்
udemy-blog மிஞ்சியுள்ள கம்யூனிச நாடுகள் எவை? சோவியத் யூனியன் தொண்ணூறுகளில் உடைந்து நொறுங்கியது. ஆனால் கம்யூனிச பாதை உடனே மூடப்படவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், கம்யூனிசக் கருத்தில் நாட்டை வழிநடத்தினர். இதனால் மக்களுக்கு நல்லது நடந்ததா என்பது இங்கு முக்கியமல்ல. கருத்தியல் என்ன என்பது மட்டுமே இங்கு பேசப்படுகிறது. சீனா மாவோ, 1940 ஆம் ஆண்டு சீனாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மக்கள் குடியரசு நாடாக சீனா மலர, முக்கியக் காரணம் இடதுசாரி கட்சி ஆகும். இடதுசாரிக் கட்சியின் ஆதிக்கத்தில் சீனா வளர்ந்து வர, சிவப்பு சீனா என்ற பெயர் கிடைத்தது. அனைத்திலும் அரசின் கட்டற்ற தலையீடு உண்டு. 2004 ஆம் ஆண்டுதான் பொதுவுடைமை என்ற த த்துவத்தைக் கைவிட்டு தனிநபர் சொத்து என்ற வழிக்கு வரத்தொடங்கியது சீனா. க்யூபா உலகிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து அளிக்கும் நாடுகளில் க்யூபா முக்கியமானது. இந்நாட்டில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தில், பிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது நண்பர்கள் வென்றனர். ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் நாடு என்பதால் அமெரிக்காவின் ஆயுள் எதிரியாக மாறியது க்