இடுகைகள்

மதமாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

இந்தியாவில் கிறித்தவத்தின் எதிர்மறை செயல்பாடுகள்! - சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

படம்
  சிலுவையின் பெயரால்…. ஜெயமோகன் கிழக்குப் பதிப்பகம்   ஜெயமோகன், அவரது வலைத்தளத்தில் கிறித்தவம் பற்றி எழுதிய கருத்துகளும் அதற்கு எதிர்வினையாக வந்த பல்வேறு வாசகர்களின் கருத்துகள், அதற்கு பதில் அளித்த எழுத்தாளரின் கருத்துகள் என அனைத்துமே சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. நூலில், ஜெயமோகன் விரிவாக கிறித்தவம் தன்னை இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள முயல்கிறது என கூறியுள்ளார். ஏறத்தாழ சிறில் அலெக்ஸ், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் எதிர்வினைகளும் அதை எப்படி ஜெயமோகன் எதிர்கொள்கிறார் என்பதையும் வாசிக்கும்போது நமக்கு கிறித்தவம் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளள முடிகிறது. பெந்தகொஸ்தே சபையின் அரசியல், தமிழில் கிறித்தவத்தை பரப்புபவர்கள் அதற்கு செய்யும் அநீதியான செயல்கள், இலக்கியவாதிகளை பணம் கொடுத்து வளைப்பது, அதற்கென போலித் தகவல்களைக் கொண்ட நூல்களை எழுதுவது என நிறைய செயல்களை நூலெங்கும் பட்டியலிடுகின்றனர்.   ஒருவகையில் இந்த நூல் கிறித்தவ அடிப்படை மதவாத தன்மையை வெளிச்சம்போட்டு காட்ட எழுதப்பட்டதோ என தோன்றுகிறது. அல்லது இந்தியாவிற்கு விரோதமான அந்நிய மதம் என்று கூற வருகிறார