இடுகைகள்

விமானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

படம்
  மார்க் வான்ஹோனாக்கர்  விமானி, எழுத்தாளர்  சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது? மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது.  பிடித்தமான நேரம்? இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும்.  பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவது பிடிக்காது. உங்களுக்கு எப்படி? ந

விண்வெளி பைலட்டாக விருப்பமா?

மிஸ்டர் ரோனி விண்வெளி பைலட்டாக என்ன தகுதிகள் தேவை? கல்யாணப் பத்திரிக்கையில் போடும்படி ஒரு டிகிரி என படிக்க கூடாது. முடிந்தவரை பொறியியல் சார்ந்து படிக்கலாம். கணினி அறிவியல் கூட படித்து வைக்கலாம். புரோகிராம் செய்ய முடியாவிட்டாலும் உதவும். பயிற்சி ஜெட் விமானத்தில் ஆயிரம் மணி நேரங்களை பயிற்சி எடுக்க செலவழித்திருக்க வேண்டும். பார்வை கண்பார்வை கோழி மீது உட்கார்ந்திருக்கும் ஈயைப் பார்க்கும் அளவு தெளிவாக இருக்கவேண்டும். கண்ணாடி அணிபவர்களுக்கான சோதனை உண்டு. அதில்  தேறினால்தான் விண்வெளி வண்டியை ஓட்ட முடியும். தலைவனாகவும், குழுவில் ஒருவனாகவும் தலைப்பில் சொன்னது போல பல்வேறு திறன்களை நீங்கள் நிரூபிக்கவேண்டு. குறிப்பாக குழுவில் இருக்கும் உளறுவாயன்களையும், சைக்கோ சீனியர்களையும் நீங்கள் ஒருங்கிணைத்துத்தான் ஆக வேண்டும். இதில் தேறாவிட்டாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.