இடுகைகள்

காலிஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை உருவானது எப்படி? - காலக்கோடு

படம்
  காலிஸ்தான் வரைபடம் காலிஸ்தான் தனி மாநிலமாக.. அதன் லோகோ காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை -காலக்கோடு 1920ஆம் ஆண்டு அகாலி தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி, பஞ்சாபி மக்களுக்கான தனி நாடு கோரிக்கையை உருவாக்கியது. இதற்காகவே பஞ்சாபி சுபா என்ற இயக்கம் உருவானது. 1966 பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு   பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களாக உருவானது. இதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றது. சண்டிகர் நகர், மைய நகரமாக மத்திய அரசின் யூனியன் பிரதேச நகரமாக மாற்றப்பட்டது. 1969 அரசியல் தலைவர் ஜக்ஜித் சிங் சோகன் இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு சென்று காலிஸ்தான் நாட்டை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். 1973 அகாலி தளம் கட்சி, பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி கோரி ஆனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை (Anandpur sahib resolution) உருவாக்கியது. 1978 துறவி நிரான்காரி மிஷன் அமைப்பின் உறுப்பினர்களுக்கும், மரபான சீக்கியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஜர்னைல்சிங் பிந்த்ரான்வாலேவை பஞ்சாபிற்கு கூட்டி வருவதற்கான கருத்தில் ஏற்பட்ட மோதலே, கொல

ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

படம்
  அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார். அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டு

விவசாயிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது! - கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்

படம்
                கேப்டன் அம்ரீந்தர்சிங் பஞ்சாப் மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக உருவாக்கியிருந்தது . இன்று அதனை மறைத்து பேசுகிறது என குற்றம்சாட்டியுள்ளாரே ? மண்டிகளை நீக்கும் திட்டம் பற்றி… . ஆனால் காங்கிரஸ் கட்சி 2017 இல் ஏன் இப்போதும் கூட மண்டிகளை நீக்குவதாக கூறவில்லையே . நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதுதான் . ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் . விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது விவகாரம் . இதற்கு மத்திய அரசு உள்ளே நுழைந்து வணிக விதிகளை வகுப்பது தேவையில்லாதது . இதை நாங்கள் விரும்பவில்லை . அப்படியென்றால் பிரதமர் மோடி உங்களை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்கிறீர்கள் . பிற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கவேண்டும் என்பது உங்கள் கருத்து அப்படித்தானே ? ஆமாம் . ஆலோசித்தபிறகு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவது சரியான முறை . ஆனால் அரசியலமைப்பு நடைமுறையை ஒதுக்கி மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில் விவசாயிகள

விவசாய சீர்திருத்த புரட்சி 2.0 வெல்லுமா? - பஞ்சாப் விவசாயிகள் டேட்டா கார்னர்

படம்
          விவசாய புரட்சி 2.0 என்று பிரதமர் மோடி அறிவித்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளின் தீவிரமான போராட்டங்களில் முடிந்திருக்கிறது . கோவிட் -19 காலத்திலும் கூட விவசாய சீர்திருத்தங்களை சரியாக செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை தணியாமல் அதனை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு . இச்சட்டம் மூலம் விவசாயிகள் அரசின் மண்டிக்கு பொருட்களை விற்றே தீரவேண்டிய கட்டாயம் இனி இல்லை . அவர்கள் விருப்பம் போல பிற மாநிலங்களுக்கு கூட விற்கலாம் . தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் . மேலும் தனியார் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்த விவசாயமும் இனி நாடெங்கும் பெருகும் வாய்ப்புள்ளது . செப்டம்பரில் இம்மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்தது . உடனே உணவு பதப்படுத்ததல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் . அவரது கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியும் பாஜக அரசின் கூட்டணியிலிருந்து விலகியது . பஞ்சாப்பில் வேர் கொண்டுள்ள கட்சி இது என்பதால் , மெல்ல போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின . பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் , மத்திய அரசின் சட்டங்களுக்கு பதில் வேறு சட்டங்களை இ

விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா

                    ஹன்னன் மொல்லா , அனைத்திந்தியா விவசாய சங்கம் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் அரசு கவனிக்கவில்லை . விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர் . ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது ? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் . சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது . போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா ? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே ? யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை . நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை . ஆனால் ஏராளம