விவசாயிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது! - கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்
கேப்டன் அம்ரீந்தர்சிங்
பஞ்சாப் மாநில முதல்வர்
காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக உருவாக்கியிருந்தது. இன்று அதனை மறைத்து பேசுகிறது என குற்றம்சாட்டியுள்ளாரே? மண்டிகளை நீக்கும் திட்டம் பற்றி….
ஆனால் காங்கிரஸ் கட்சி 2017இல் ஏன் இப்போதும் கூட மண்டிகளை நீக்குவதாக கூறவில்லையே. நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதுதான். ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது விவகாரம். இதற்கு மத்திய அரசு உள்ளே நுழைந்து வணிக விதிகளை வகுப்பது தேவையில்லாதது. இதை நாங்கள் விரும்பவில்லை.
அப்படியென்றால் பிரதமர் மோடி உங்களை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்கிறீர்கள். பிற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கவேண்டும் என்பது உங்கள் கருத்து அப்படித்தானே?
ஆமாம். ஆலோசித்தபிறகு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவது சரியான முறை. ஆனால் அரசியலமைப்பு நடைமுறையை ஒதுக்கி மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகள் 72 சதவீதம் பேர் உள்ளனர். நீங்கள் சட்டங்களை அவர்களுக்காக உருவாக்கும்போது அவர்களை கருத்தில் கொள்ளவில்லை. பஞ்சாப் மாநிலம் விவசாய உற்பத்தியில் அதிக பங்களிப்பை அளித்து வருகிற மாநிலம் என்பதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
பஞ்சாப் மாநிலம் குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு அடிமையாகிவிட்டது. எனவேதான் பிற மாற்றங்களை விட இதனை ஏற்கமாட்டேன்கிறார்கள் என மத்திய அரசு கூறுகிறதே?
இந்த விவகாரத்தை நாம் இரண்டு வித்மாக பிரித்துக்கொள்ளலாம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை அரசின் உணவுக்கழகம் குறைந்தபட்சகொள்முதல் விலையை அளித்து பெற்றுக்கொள்கிறது. இதை உணவுத்துறை அமைச்சகம் பெற்று பொதுவிநியோகத்துறைக்கு பயன்படுத்துகிறது. இதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனை தனியார் நிறுவனங்கள் வாங்கினால் அது மக்களுக்கு செல்லுமா? செல்லாது.
அரசு இப்போது சோளத்திற்கு குவிண்டாலு்க்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக 1800 அளிக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் குவிண்டாலுக்கு ரூ. 600 மட்டுமே வழங்குகின்றனர். குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கான சட்டம் இல்லாதபோது விவசாயிகள்தா னே பாதிக்கப்படுவார்கள்? அப்போது அதற்கான சட்டத்தை மத்திய அரசு உருவாக்கிவிட்டு பேசுவதுதானே நியாயமாக இருக்கும்?
பஞ்சாப்பில் அரசுக்கு பெரும்பாலான வருவாய் விவசாயத்துறையிலிருந்துதான் வருகிறது. இந்த நிலையில் பிற சேவைத்துறை, தொழில்துறையின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
எங்கள் மாநிலத்தில் இந்த ஆண்டு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இதனை மூன்று வகையாக பிரிக்கலாம். அரசு வேலை, தனியார் வேலை, ஸ்டார்ட்அப் என உள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில்துறை ஒப்பந்தங்களை செய்துள்ளோம். பஞ்சாப் மாநிலத்தில் எங்குமே ஸ்ட்ரைக் நடந்தது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
விவசாயிகள் பிரச்னைகள் பிரதமர் மோடி என்ன சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்?
விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தில் 70 வயதான பெண் ஒருவர் பனியால் இறந்துபோய்விட்டார். நாம் இந்த விவகாரத்தை ஒன்றாக இணைந்து முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இந்தியாவின் ஒரு பகுதிதான் பஞ்சாப் என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் பிரச்னை தீர்ந்தால்தான் மகிழ்ச்சியாக வீடு திரும்புவார்கள். அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
இந்தியாடுடே
ரா்ஜ் செங்கப்பா
கருத்துகள்
கருத்துரையிடுக