நாங்கள் எந்த மதத்தையும் குறிப்பிட மதமாற்றச்சட்டத்தை உருவாக்கவில்லை! பிரிஜேஷ் பதக்

 

 

 

 

Riot cases will be withdrawn if politically motivated: U.P ...

 

 

 

பிரிஜேஷ் பதக்


நீதித்துறை அமைச்சர்


உத்தரப்பிரதேசம்



மாநில அரசு கொள்கையை மசோதாவாக கொண்டு வந்து விவாதிக்காகமலேயே சட்டமாக மாற்றியது ஏன்?


விதான் சபா இப்போது நடைபெறவில்லை சட்டவிரோத மதமாற்ற செயல்பாடுகள் அதிகரித்து வந்தன. இது இப்படியே தொடர்ந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறும் கலவரங்கள் ஏற்படும் என்பதால் அரசு உடனடியாக சட்டமாக கொண்டுவந்துவிட்டது.


அப்படி அரசுக்கு என்னவிதமான புள்ளிவிவரங்கள் கிடைத்தன என்பதைச் சொல்லமுடியுமா?


நான் உங்களுக்கு அதுபற்றிய சரியான தகவல்களைக் கொடுக்க முடியாது. மதமாற்றம் தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகின. பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருவதை ஊடகங்கள் வெளிப்படுத்தின. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் குற்றங்கள் அதிகரித்து வந்தன. எனவே கட்டாய மதமாற்ற நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்த அரசு முயன்றது.


நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டம் குறிப்பிட்ட மதத்தைக் குறி வைப்பதாக பயம் எழுந்துள்ளதே?


சோர் கி தாதி மெய்ன் டின்கா என்று இந்தியில் சொல்லுவார்கள். இதுபற்றி பயப்படுபவர்கள்தான், சட்டவிரோத மதமாற்றங்களை செய்து வருகின்றார்கள். இதுபற்றி எதிர்மறையாக எந்த கருத்தும் சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் ஆகியோரிடமிருந்து வரவில்லையே. அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். அதில் வாழும் உரிமை ஒருவருக்கு உண்டுதான். ஆனால் கட்டாய மதமாறறத்தை உறுதியான சட்டம் மூலம் தடுக்கவேண்டிய அவசியம் உள்ளது.


மத்திய பிரதேசத்தில் கிறிஸ்துவ மதமாற்ற பிரச்னை உள்ளது?


நாங்கள் குறிப்பிட்ட எந்த மதத்தையும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மிரட்டல், கவர்ச்சி என எப்படியும் ஒருவரை ஒரு மத த்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றம் செ்ய்வது தவறு.


இந்த சட்டத்தின் மூலம் மாவட்ட நீதிபதிக்கு அதிகளவிலான அதிகாரம் வழங்கப்படுகிறதே?


மதமாற்றம் பற்றிய விவகாரத்தை மாவட்ட நீதிபதி முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கைகளை எடுப்பார். மாவட்டத்தின் நிர்வாக தலைமையை மாவட்ட நீதிபதிதான் ஏற்பார். அவர்கள் சட்டத்தை மேம்படுத்துபவரும் கூட,


இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வீர்கள்? இப்படி நடக்காமல் தடுக்க ஏதாவது பாதுகாப்பு வசதிகள் உண்டா?


தனிப்பட்ட மனிதர்களுக்கு எதிராக சட்டம் பயன்படுவதால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இல்லை. அவர்கள் இதற்கு எதிராக எதை்யும் பேச முடியாது. காரணம் முறையாக விசாரணை செய்யப்பட்டுத்தான் அவர் கைது செய்யப்படுகிறார்.

அப்படியும் தவறு நேர்ந்தால் அதில் திருத்தங்கள் செய்துகொள்ளலாம். ஜனநாயகப்படி அரசியலைமைப்புச் சட்டப்படிதான் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களை மக்களின் கருத்துப்படி மாற்றலாம். இதில் மக்களுக்கு உறுதியான சட்டப் பாதுகாப்பு உள்ளது.


தி வீக்

டிச.13, 2020


குறிப்பு


உத்தரப்பிரதேசத்தில் 22 வயதுப் பெண் அவரது கணவரை விட்டு பிரித்து காப்பகத்தில் அரசு மூலம் வைக்கப்பட்டுள்ளார். என்ன காரணம்? மதமாற்ற தடைச்சட்டம் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருமாத கர்ப்பிணியான அவர் அரசின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் வயிற்றில் ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இப்பெண்ணின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கட்டாய மதமாற்ற திருமணம் என்று அரசு கருதுவது இருக்கட்டும். 22 வயதான பெண்ணின் தேர்வை தவறு என அரசு எப்படி தீர்மானிக்கமுடியும். இது அடிப்படையான மனித உரிமை மீறல் அல்லவா? உத்தரப்பிரதேச அரசின் லவ் ஜிகாத் சட்டம் அரசியலமைப்பின் 21ஆவது பிரிவுக்கு எதிராக அமைந்துள்ளது. மேலும் பாஜக அரசு கொண்டு வர நினைக்கும் ஒருங்கிணைந்த சிவில் சட்டத்திற்கும் எதிரானது. இப்படி திருமணமானவர்களை சட்டம் மூலம் பிரித்து வைத்து அரசு என்ன சாதிக்க நினைக்கிறது? ஒருவர் தான் யாரை திருமணம் செய்யவேண்டும் என்பதை இனி அரசுதான் கூறவேண்டுமா? அரசு சொல்லும் பட்டியலில் உள்ளவரை பெண்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது பெண்களுக்கான மேம்பாட்டுத்திட்டமாக அரசு நடைமுறைப்படுத்துகிறதா?


நீதிமன்றமும் மாநில அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்க்காவிட்டால் சிறுபான்மையினர் அம்மாநிலத்திலிரு்ந்து வேறு பாதுகாப்பான சுதந்திரமான இடங்களுக்கு குடிபெயருவதே நல்லது.


டைம்ஸ் ஆப் இந்தியா



கருத்துகள்