குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

 

 

 

 

A Movie Review - Over the Hedge Starring Bruce Willis ...

 

 

 

 

ஓவர் தி ஹெட்ஜ்


அனிமேஷன் 

 

Director:Tim Johnson, Karey Kirkpatrick
Produced by:Bonnie Arnold
Screenplay by:Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick

 

 

Video - Over the Hedge - Final Battle | Villains Wiki ...

போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி, தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை.


கதையின் லைன் சின்னதுதான். நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது. போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது. அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான். இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது. கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது.


Image - Over-the-Hedge-1-DCTPPLLZCJ-1600x1200.jpg ... 

அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது. இதனால்

அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி, நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.


தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர்ந்து இருப்பதுதான் பலம் என ஆமை குடும்பத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். இதோடு மனிதர்களின் வன்மமான புத்தி எப்படி சிறு விலங்குகளை பலி கொள்கிறது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ஒருவகையில் மனிதர்கள் தனித்தீவாகவும், விலங்குகள் தனியாகவும் உள்ளன. அவர்களுக்கு இடையில் பெரிய வேலி உள்ளது. நரியின் டகால்டி ஐடியாவால் உள்ளே போய் மனிதர்களிடம் அப்பாவியாக மாட்டிக்கொண்டு ஆமையின் குடும்பம் படாதபாடு படுகிறது. இதற்கிடையில் நரி, ஆமையின் எதிரி கரடி வேறு வட்டிக்காரன் போல சரியாக அங்கு வந்துவிட கச்சேரி ஆரம்பம்.


படத்தை பாருங்கள். குடும்பத்தை அரவணையுங்கள்


கோமாளிமேடை டீம்




கருத்துகள்