அழியும் நிலையிலுள்ள மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை! - பதில் சொல்லுங்க ப்ரோ

 

 

 

 

Ear Spacing Amongst Tribes

 

 

வீடியோ சாட்டிங் செய்யும்போது மூளையில் என்ன நடக்கிறது?


பொதுவாக ஒருவருடன் நடைபெறும் உரையாடலில் 80 சதவீதம் முகத்திலுள்ள உணர்ச்சிகள் மூலமாகத்தான் நடக்கிறது. ஒருவருடன் பேசும்போது புன்னகை, இமைகளை உயர்த்துவது, உதடுகளில் ஏற்படும் மாற்றம், கண்கள் பெரிதாவது ஆகிய விஷயங்கள் நடக்கும். 2013இல் நடைபெற்ற ஆய்வில், வீடியோ சாட்டிங்கில் ஒருவர் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை சைபர்சைக்காலஜி பத்திரிகை வெளியிட்டுள்ளது. பொதுவாக பேசுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது ஆகியவற்றை விட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இதில் அதிகம் நடக்கிறது.



நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எங்கே போகின்றன?


பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 8 சதவீதம் மட்டுமே மறுசுழற்சியாகின்றன. மற்றவை எல்லாம் கழிவாகவே தேங்குகின்றன. அமெரிக்காவில் இருந்து சீன நிறுவனங்கள் 7 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் அமெரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதில்லை. சீன நிறுவனங்கள் இதனை இருபது ஆண்டுகளாக செய்து வருகின்றன. 2018இல் சீனா தேவையில்லாத குப்பைகளை இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளது. சில வல்லுநர்கள் குறைவாக பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்வதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் குறைவாக பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதே சிறப்பானது. பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் வருகின்றன. இவற்றின் பயன்பாடு மொத்தமாக 40 சதவீதமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் திரும்ப பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தயாரிப்பாளர்களை வற்புறுத்தவேண்டும். இதுவே ஒரே வழி என்கிறார் சூழலியலாளர் ஒருவர்.


அழியும் மொழிகளை காப்பாற்றவேண்டிய அவசியம் என்ன?


ஒவ்வொரு மொழியிலும் தொன்மையான பல்வேறு அறிவுக்களஞ்சியம் இருக்க வாய்ப்புண்டு. குறிப்பிட்ட மொழியை அழியட்டும் என்று அரசு அல்லது மக்கள் விட்டுவிட்டால் அதில் உள்ள தொன்மையான அறிவு, முக்கியமான சொற்கள் என அனைத்தையும் இழந்துவிடும். இ்ன்று உலகில் அழியும் நிலையில் உள்ள மொழிகள் பெரும்பாலும் பழங்குடியினருடையது. அவை அழியும்போது அதில் சேர்த்து வைத்துள்ள இயற்கை சார்ந்த அறிவும் காணாமல் போகிறது.


அண்மையில் யுனெஸ்கோ 7 ஆயிரம் மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளதாக கூறியுள்ளது. அதாவது உலக மொழிகளில் 40 சதவீதம். மொழியில் உள்ள அறிவோடு குறிப்பிட்ட மக்களை எப்படி புரிந்துகொள்வது என்பதும் மொழியோடு நீக்கமற இணைந்துள்ளது. இதனால்தான் ஒருமொழியை பேச முடியாதபோதும், அதிலுள்ள சில வார்த்தைகளை பேசினால் கூட மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஒரு மொழியை அங்கீகரித்து அதற்கு கௌரவம் கொடுத்து பேசுவது யாருக்குமே மகிழ்ச்சி தரும்தானே?


இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் உள்ள கயார்டில்ட் உள்ளிட்ட பல்வேறு பழங்குடிகளின் மொழி ஆங்கிலேயர் ஆட்சியில் அழிந்துபோனது. இது திரும்ப பெற முடியாத இழப்பு. இதுபோல ஹவாயில் பழமையான மொழிகளை காப்பாற்ற முயற்சிளள் எடுக்கப்பட்டு சில ஆயிரம் இருந்த பழமையான மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 2010இல் 24 ஆயிரமாக பெருகிறது. டெராலிங்குவா அண்ட் தி எண்டேஞ்சர்டு லாங்குவேஜ் பண்ட் நிறுவனம் மூலம் அழியும் நிலையிலுள்ள மொழிகளை பயில்பவர்களுக்கு நிதியளிக்கப்படுகிறது.

பாப்புலர் சயின்ஸ்



கருத்துகள்