காணாமல் போன மகளைத் தேடும் தந்தையின் போராட்டம்! - கதம் - கிரண்
கதம்
தெலுங்கு
முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட தெலுங்கு படம். படத்தின் கதை பழிக்குப்பழி வகைதான். ஆனால் அதனை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதில்தான் படம் நிறைய மாறுபடுகிறது.
ரிஷி என்ற இளைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு நினைவுகள் அழிந்துவிட்டது என மருத்துவர் கூறுகிறார். விபத்தில் அப்படி ஆகிவிட்டது என அவரது பெண்தோழி ஆறுதல் சொல்லுகிறார். அவரை அழைத்துக்கொண்டு காரில் செல்லும்போது திடீரென வழியில் கார் நின்றுபோகிறது. அந்த வழியில் அவர்களை பெட்ரோல் பங்கில் கவனித்து வந்த மர்ம மனிதர்(Bhargava Poludasu) அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்.
ஆனால் அங்கு சென்றதும் ரிஷிக்கு ஏதோ தவறான இடத்திற்கு வந்துவிட்டோம் என உள்ளுணர்வு எச்சரிக்கிறது. அதுபோலவே பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. ரிஷியின் பெண்தோழியை கற்பழிக்க மர்ம மனிதரின் நண்பர் முயல்கிறார். அதுபற்றிய வாக்குவாதத்தில் ரிஷி மர்ம மனிதரை தாக்குகிறார். அப்போது அவரது பெண்தோழி அவரை தாக்கி வீழ்த்துகிறார். உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது? அந்த வீட்டிற்கு மர்ம மனிதர் எதற்கு அவர்களை அழைத்து வருகிறார் என்பதையெல்லாம் நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் காட்சிகளாக காட்டுகிறார்கள்.
படத்தில் பனிசூழ்ந்த வீட்டில் வசிக்கும் மனிதராக நடித்துள்ள பார்க்கவா பேசுவதை விட உடல்மொழியில் காட்டும் உணர்ச்சிகள் அதிகம். பிறர் அவரது நடிப்புக்கு துணை செய்வதை தங்கள் பணியாக கொள்கிறார்கள். ரிஷி யார் என்பதை அவரே தெரிந்துகொள்வது சிறப்பாக உள்ளது. இறுதியில் வரும் காட்சி படத்தின் தொடக்கத்திலேயே ஏரியல் வியூவாக காட்டப்பட்டுவிடுகிறது.
படத்தில் வரும் பனி, துப்பாக்கி, மனதில் சூளும் வன்மம், கோபம், விரக்தி என பல்வேறு விஷயங்களை முடிந்தளவு உடல்மொழியாகவே காட்டியுள்ளனர். தெலுங்கு படம் என்றாலும் படத்தின் உருவாக்கத்தின் தரம் சிறப்பாகவே உள்ளது. ஶ்ரீசரண் பகலாவின் பினனணி இசை பனியின் தனிமை, பயத்தை சிறப்பாக பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்துகிறது.
புதிர் முடிவு
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக