இடுகைகள்

வாகனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவில் சாதனை படைக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  உர்டாசன், வாபி லீலா இப்ராகிம், டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவின் பிரம்மாக்கள் டாரியோ, டேனியெலா அமோடெய் துணை நிறுவனர்கள், ஆந்த்ரோபிக்   ஆந்த்ரோபிக், லாபநோக்கற்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனம். செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்வது எளிதல்ல. அதற்கு தொடக்கத்திலேயே அதிக நிதி தேவை. எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ எக்சேன்ஞ்ச், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் பெருமளவு நிதி பெற்று இயங்கி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்களுக்கு நிகராக சாட்பாட், கிளாட் 2 ஆகிய மாடல்களை உருவாக்கியுள்ள நிறுவனம்தான் ஆந்த்ரோபிக். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் டாரியோ இயக்குநராகவும், டேனியெலா தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதர உறவுமுறையைக் கொண்டவர்கள். இந்த நிறுவனத்தை ஏழு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தொடங்கினர். இவர்கள் அனைவருமே ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். ‘’நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம், அதை கார்ப்பரேட் அறிக்கை போல மாற்றவேண்டாம் என்ற நோக்கத்தில்தான்   ’’ என இயக்குநர் டாரியோ தெளிவாக பேசுகிறார

ஓட்டுநர்களை ஒருங்கிணைக்கும் பிளாக்பக் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40

படம்
    பிளாக்பக் நிறுவனர்கள், ராஜேஷ், ஹிருதயா ஆகியோருடன் நிறுவன இயக்குநர்.   ராஜேஷ் யாபாஜி,34 சாணக்யா ஹிருதயா,33   துணை நிறுவனர்கள், பிளாக்பக்.   ராஜேஷ், ஹிருதயா என இரண்டுபேரும் இணைந்து சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளத்தில் ஒருவர் தனக்கு தேவையான வாகனங்களை பதிவு செய்துகொள்ள முடியும். வாகனம்   சென்று கொண்டருக்கும் இடம், அதன் நிலை   பற்றி எளிதாக அறியலாம். தொடக்கத்தில், ஐடிசியில் விநியோகப் பிரிவில் ராஜேஷ், ஹிருதயா என இருவரும் வேலை செய்தனர். அப்போது, பொருட்களை விநியோகம் செய்ய சரக்கு போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்திருக்கிறது. இதை நாம் எளிமையாக்கி டிஜிட்டல் செய்தால் வேலை எளிதாக இருக்குமே என இருவருமே எண்ணினர். அதன் அடிப்படையில் வாகன ஓட்டுநர்களிடம் பேசி, அவர்களை திட்டத்தில் இணைத்து பிளாக்பக்எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.   இந்த நிறுவனத்தின் சேவை முழுக்க சிறுகுறு நிறுவனங்களுக்கானது. லாரி ஓட்டுநர்களில் இருபது சதவீதம் பேர்தான், ஸ்மார்ட்போனை வைத்திருந்தார்கள் என்பது நிலையை சிக்கலாக்கியது. தாங்கள் என்ன செய்கிறோம் என இவர்களிட

இ ஸ்கூட்டர்கள் - சந்தையில் களைகட்டும் பிராண்டுகள்

படம்
  ஆங்கில தனியிசைப் பாடல்களை இதனை நிறையப் பார்த்திருப்பார்கள். இப்போது பார்க்கப்போகும் இ ஸ்கூட்டர்களை இப்போதுதான் தமிழ் நடிகர்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.  உனாகி மாடல் ஒன் இதில் ஹோவர் போர்டு கிடையாது. ஆனால் அசத்தலான வடிவமைப்பு பிரேக் அமைப்பு முறை ஆகியவை அசத்துகிறது. இதனை சூழலைப் பாதிக்கும் வாகனங்களுக்கு பதிலாக வாங்கலாம்.  விலை 89,900 ப்யூர் ஏர் புரோ இதன் முன் சக்கரம் 500 வாட்ஸ் சக்கரம் கொண்டது. பத்து இன்ச் சக்கரங்கள் எளிதாக தடைகளை சமாளித்து கடக்க உதவுகிறது. நகரை ஜாலியாக சுற்றி வர ப்யூர் உதவும்.  விலை 59,900 சீக்வே நைன்பாட் மேக்ஸ் ஜி30 இ 2 நிறைய அப்டேட்டுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டர் இது. பார்க்கவும் அழகாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.  விலை  79,900 ஜியோமி  மி எசன்ஷியல் பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இதில் பிரேக் சிஸ்டம், ஆற்றல், பேட்டரி என இரண்டுமே சிறப்பாக உள்ளது.  விலை 34, 700 ஜியோமி மி புரோ 2 600 வாட்ஸ் பவருடன் இயங்கும் ஸ்கூட்டர். பெரிய அம்சங்கள் கிடையாது. ஆனால் பட்ஜெட்டிற்குள் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான ஸ்கூட்டர் இது.

ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் புதிய வடிவமைப்பிலான சென்சார்! - தொழிற்சாலை, மருத்துவப் பயன்பாடுகளுக்கானது.

படம்
            ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார் ! பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள போட்டோனிக் நானோ அமைப்பை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர் . தற்போது , அந்த வடிவமைப்பில் ஹைட்ரஜன் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யிலாஸ் சப்ரி , அஹ்மது கன்ட்ஜானி ஆகிய ஆராய்ச்சியாளர்களே இதன் பிரம்மா . புதிய ஹைட்ரஜன் சென்சார் , தொழில்துறையிலும் , ஹைட்ரஜன் வாயுவை சேமிக்கும் இடங்களிலும் , மருத்துவச்சோதனைகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது . புதுப்பிக்கும் ஆற்றல் மூலமான ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கி சேமித்து வருகின்றனர் . எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக வாயுவாக ஹைட்ரஜன் உள்ளது . எனவே , அதன் கசிவை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களின் தேவை உள்ளது . தற்போது சந்தையில் கிடைக்கும் சென்சார்களில் உள்ள உலோக ஆக்சைடு அடுக்குகள் ஹைட்ரஜனை கண்டுபிடிக்க உதவுகின்றன . இவற்றில் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன . 150 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலையில் செயல்படும் இவை , பல்வேறு

காரில் போகும்போது பாடல் கேட்டால் தவறா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி - மிஸ்டர் ரோனி காரில் போகும்போது ரேடியோ கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது குறைபாடா? எனக்கு அப்படிச் செய்வதுதான் பிடித்திருக்கிறது. பிடித்திருந்தால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இப்போதுதான் இந்தியாவில் வாகன அபராதங்களை விண்ணளவு ஏற்றியிருக்கிறார்கள் என்பதால் கவனம். காரை விற்று தங்களின் கலாதிருப்திக்கு கப்பம் விற்கும்படி ஆகிவிடும். எனவே, ரேடியோவை சத்தமாக வைத்துக்கேளுங்கள் அதுவே உங்களுக்கும், பர்சிற்கும் நல்லது. போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது என்பதில் கூட தவறுகள் நேர அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை ஓட்டும்போது கவனமாக அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உண்மையில் பாடல் கேட்பதை மனம் தூண்டினால் நீங்கள் அதைச் செய்யலாம். குரோனிங்கன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் கடும் போக்குவரத்து நெரிசலில் போரடித்து பாட்டு கேட்பது கூட வண்டி ஓட்டும் கவனத்தைக் குலைக்கும் என்கிறது. தகவல் - பிபிசி

இ - ஸ்கூட்டர் புதுசு - ஜி30 சந்தையைக் கலக்குமா?

படம்
Max G30 e-scooter பெரிய வண்டிகளை ஓட்டுவதற்கு இவை சிறந்த மாற்று. ஸ்டைலாக கோட்சூட் போட்டு வண்டி எடுத்தாலும் சரி. சிம்பிளாக லீவிஸ் ஜீன்ஸ், போலோ டிஷர்ட் போட்டு இ ஸ்கூட்டர் ஓட்டலாம். பிரமாதமாக இருக்கும்.  நைன்பாட் எனும் சீனக்கம்பெனியின் தயாரிப்பு. இக்கம்பெனி பல்வேறு இ ஸ்கூட்டர்கள், ஸ்கேட்டர்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிமுகப்படுத்தியது நைன்பாட். செக்வே - நைன்பாட் என்ற பெயரில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது.  மணிக்கு இருபத்தைந்து கி.மீ வேகத்தில் செல்லும் இ ஸ்கூட்டர் இது. இதன் பேட்டரி திறன் 551 wh. 10  அங்குல ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்டது.  இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத இ ஸ்கூட்டர் இது. விரைவில் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.  நன்றி: நியூ அட்லஸ்

பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா? கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும். நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது. மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.