பயோஜியோகிராபி என்றால் என்ன?

 

 

அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும்?

2112ஆம் ஆண்டு வரை இயற்கை வளங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என அறிவியல் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அரசின் கொள்கைகள் மாறினால், நிலைமை மாறும்.

ப்ளூரோசன்ட் விளக்குகளை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

ஒருமுறை விளக்கை அணைத்து பதினைந்து நிமிடங்களுக்குள் திரும்ப எரிய விடாமல் இருந்தால் மின்சாரம் சேமிப்பாகும்.

காரில் பயணிக்கும்போது, சாளரங்களை திறந்து வைப்பது அல்லது குளிர்சாதன வசதியை பயன்படுத்துவது என இதில் எது சிறந்தது?
காரில் பயணிக்கும்போது காற்றை எதிர்த்து பயணிக்க எஞ்சின் சக்தி தேவைப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு அறுபத்து நான்கு கி.மீ. வேகம் என்ற நிலையில் சாளரம் மூடப்பட்ட நிலையில் காருக்கு எரிபொருள் சிக்கனமாகிறது. ஏர் ட்ரேக் எஃபக்ட் - காரின் பின்தள்ளும் விளைவு என்பதை கார் எதிர்கொண்டு சாலையில் முன்னேறுகிறது. அறுபத்து நான்கு கி.மீ வேகம் செல்லும் காருக்கு ஐந்து குதிரைத்திறன் சக்தி தேவை. தொன்னூற்று ஏழு கிலோமீட்டர் வேகம் எனும்போது பதினெட்டு குதிரைத்திறன் சக்தி தேவைப்படுகிறது.

எஞ்சினை உயிர்ப்பிப்பது அல்லது அதை அப்படியே இயக்கத்தில் வைத்திருப்பது என எதில் எரிபொருள் சிக்கனம் உண்ட?

எஞ்சினை அணைத்து வைப்பதில்தான் எரிபொருள் சிக்கனம் உண்டு. தேவை என்றால் திரும்ப ஆன் செய்துகொள்ளலாம்.

சூழலியல் சுவடுகள் என்றால் என்ன?

1990ஆம் ஆண்டு வாக்கர்நாகல், வில்லியம் ரீஸ் ஆகிய இரு ஆய்வாளர்கள் இம்முறையை உருவாக்கினர். இம்முறை, மக்கள் இயற்கை வளங்களை எந்தளவ பயன்படுத்துகிறார்கள், அதன் விளைவாக உருவாகும் கழிவுகள், இயற்கை கழிவுகளை உறிஞ்சி எப்படி வளங்களை மீண்டும் உருவாக்குகிறது என்பதை அளவிட உதவுகிறது.

பயோஜியோகிராபி என்றால் என்ன?

கரோலஸ் லினானியஸ் என்ற ஸ்வீடன் நாட்டு தாவரவியலாளர் பயோ ஜியோகிராபியை உருவாக்கினார். சூழல் அமைப்பில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி, அழிவு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அளிக்கிற துறை இது.




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்