இடுகைகள்

உற்சாகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோலோ டேட்டிங் தான் ஈஸி!

படம்
  சோலோ டேட் போகலாமா? இன்று ஒரு டூர் போக ஆபீசில் திட்டமிடுகிறார்கள் என்றால் என்ன பிரச்னை முன்னே வந்து நிற்கும்?  அவன் வந்தால் நான் வரமாட்டேன். அவன் வரலைனா நான் வரமாட்டேன். இப்படி எல்லாம் ஆபீஸ் ஊழியர்கள் வம்பு அரசியல் செய்வார்கள். ஆனால் யாருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக இத்தனை அரசியல்களை, வம்புகளை சமாளித்து போக பிடிக்குமா? எனவே, நீங்கள் வரவே வேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் என பலரும் தனியாகவே போகிறார்கள். ஜாலியாக சூழலை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சியாக நினைத்ததை செய்கிறார்கள். இதில் நாம் டூர் என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். ஆனால் சோலோ டேட் என்பது என்ன? அதுவும் நினைத்த லட்சியமான சுற்றுலா தலத்திற்கு போவதுதான்.ஆனால் காதலர், காதலி இருந்தாலும் கூட தனியாகவே போவதுதான் விஷயம்.  இன்று தனியாக வாழ்பவர்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு நண்பர்கள், காதலர், காதலி, அலுவலக ஆட்கள் என யாரும் இல்லாமல் தனியாகவே செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடத் தொடங்கியிருக்கின்றனர். எனவே, இந்த டிரெண்ட் இப்போது அதிகளவு பரவலாகத் தொடங்கியிருக்கிறது.  இந்திய சமூகத்தில் ஆணோ

எஸ்பிரஸ்ஸோ காபி குடித்திருக்கிறீர்களா? - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
giphy தெரிஞ்சுக்கோ! எஸ்பிரஸ்ஸோ காபியை பனகல் பார்க் அருகிலுள்ள ஸ்டார் பக்ஸில் கூட நீங்கள் அருந்தியிருக்கலாம். அக்காபி பற்றி மேலதிகமாக நமக்கு என்ன தெரியும்? காபியின் விலை பற்றி புகார் சொல்லாதீர்கள். அதைத்தவிர வேறுவிஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம். ஒரு அவுன்ஸ் எஸ்பிரஸ்ஸோ காபி குடித்தால், அதேயளவு  திராட்சையில் உள்ள 2.66 கலோரி சக்தி கிடைக்கும்.  30 மி.லி. காபியில் உள்ள காபீன் 5.7 மணிநேரம் வயது வந்தோருக்கு ஊக்கமூட்டியாக உள்ளது. எஸ்பிரஸ்ஸோ காபியை 20 முதல் 30 நொடிகளில் தயாரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.  இக்காபியில் ஒரு ஷாட் என்பது 30 மி.லி., இரண்டு ஷாட் என்பது 60 மி.லி. இந்த இரண்டு விதங்களில் காபியை கடைகளில் வழங்குகிறார்கள்.  30 மி.லி காபியில் 1500 வேதிப்பொருட்கள் உள்ளன.  இத்தாலியர்கள் ஆண்டுக்கு 14 பில்லியன் கப்புகள் காபியை குடிக்கிறார்கள். வயது வந்தோருக்கு தலைக்கு தலா 275 கப்புகள் காபி என்பது தோராய அளவு.  தொடக்கத்தில் காபி மெஷின்கள் மணிக்கு ஆயிரம் கப்புகள் காபியை தயாரித்து வழங்கின.  ஜென்னாரோ பெலிசியா என்ற காபியின் சுவையை தரம் பிரிப்பவர், தன் நாக்கை 10 ம

காபி குடித்தால் உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி  டீ, காபி குடித்தால் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுமா? சேட்டன் கடை டீ குடித்தாலும் சரி, சாய் கிங்ஸில் போய் டெட்ரா பேக்கில் டீ வாங்கி எலைட்டாக குடித்தாலும் சரி. அதைக்குடித்த சிறிது நேரத்தில் மடியிலிருந்து கனம் இறங்குவதைப் போலத் தோன்றும். தனித்தமிழில் சிறிது நேரம் காத்திருங்கள் தோழா. சிறுநீர் சிந்திவிட்டு வருகிறேன் என்று செல்லவேண்டி வரும். காரணம். அதிலுள்ள காஃபீன். இதனால்தான் உயர்தர சுவையில் கோத்தாஸ் காபி, லியோ காபி குடித்தாலும் மூத்திரம் பிய்த்துக்கொண்டு போகிறது. எனவே டீ குடியுங்கள். கூடவே அம்மா குடிநீரையும் குடியுங்கள். விரைவில் உங்களுக்கே தெரிந்துவிடும் எது சிறந்தது என்று. நன்றி - பிபிசி