இடுகைகள்

பப்பாயா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

படம்
  விர்டா ஹெல்த் கேரோஸ் ஜெனரேஷன் ஜீனியஸ் பப்பாயா குளோபல் ரன்வே புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள் தி நார்த் ஃபேஸ் சர்குலர் குளோத்திங் ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ. தெராபாடி வலியைக் குறைக்கும் கருவி வலியில் இருந்து நிவாரணம் தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களத