இடுகைகள்

விக்ரம் குமார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிட

கலக்கும் காமெடியோடு பழிக்குப்பழி படலம்! - கேங்லீடர் சினிமா!

படம்
கேங்லீடர் - தெலுங்கு இயக்கம் - விக்ரம் கே குமார் எழுத்து - விக்ரம் குமார், வெங்கட் டி பதி கேமரா - மிரோஸ்லா ப்ரோசெக் இசை - அனிருத் ஆஹா ... அசத்தலான கதையும், அம்சமாக நடித்து கொடுத்திருக்கும் லஷ்மி, சரண்யா பொன்வண்ணன், நானி ஆகியோரின் நடிப்புதான். இசையில் அனிருத் நிறைய இடங்களில் உதவுகிறார். சீரியசான இடங்களை படக்கென உடைக்கும் காமெடியும் செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரியா அருள் மோகனும் செம அழகு என்பதால், பக்கத்திலிருக்கும் காதலி கூட சுமாராக தோன்ற வாய்ப்புள்ளது. அய்யய்யோ .... மனம், 24 முதற்கொண்டு வரும் பின்னோக்கி போகும் உத்தியும், இது நடக்காமல் இருந்தால் என காட்சிகள் மாறும் விதம் ஒருகட்டத்தில் படத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இந்த காட்சி உண்மையா அல்லது பென்சில் சிஸ்டத்தில் டைப் செய்துகொண்டிருக்கிறாரா என்று டவுட் ஆகிறது. வெண்ணிலா கிஷோரை ஓரினச்சேர்க்கையாளராக காட்டி சிரிக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது.  கார்த்திகேயா கிடைத்த வாய்ப்பில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். இது முழுக்க நானியின் சினிமா என்பதால், ஜாலியாக நீங்கள் ரசிக்கலாம். கதை, வங்கி கொள்ளையில் கூட