கலக்கும் காமெடியோடு பழிக்குப்பழி படலம்! - கேங்லீடர் சினிமா!
கேங்லீடர் - தெலுங்கு
இயக்கம் - விக்ரம் கே குமார்
எழுத்து - விக்ரம் குமார், வெங்கட் டி பதி
கேமரா - மிரோஸ்லா ப்ரோசெக்
இசை - அனிருத்
ஆஹா...
அசத்தலான கதையும், அம்சமாக நடித்து கொடுத்திருக்கும் லஷ்மி, சரண்யா பொன்வண்ணன், நானி ஆகியோரின் நடிப்புதான். இசையில் அனிருத் நிறைய இடங்களில் உதவுகிறார். சீரியசான இடங்களை படக்கென உடைக்கும் காமெடியும் செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரியா அருள் மோகனும் செம அழகு என்பதால், பக்கத்திலிருக்கும் காதலி கூட சுமாராக தோன்ற வாய்ப்புள்ளது.
அய்யய்யோ....
மனம், 24 முதற்கொண்டு வரும் பின்னோக்கி போகும் உத்தியும், இது நடக்காமல் இருந்தால் என காட்சிகள் மாறும் விதம் ஒருகட்டத்தில் படத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இந்த காட்சி உண்மையா அல்லது பென்சில் சிஸ்டத்தில் டைப் செய்துகொண்டிருக்கிறாரா என்று டவுட் ஆகிறது. வெண்ணிலா கிஷோரை ஓரினச்சேர்க்கையாளராக காட்டி சிரிக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது.
கார்த்திகேயா கிடைத்த வாய்ப்பில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். இது முழுக்க நானியின் சினிமா என்பதால், ஜாலியாக நீங்கள் ரசிக்கலாம்.
கதை, வங்கி கொள்ளையில் கூட்டாளிகளாகப் போய் பலியாகும் குடும்ப ஆட்களுக்காக பலிவாங்கும் பெண்கள் கூட்டணி. அதற்கு திட்டம் போட்டு பகை தீர்க்க உதவுகிறார் நானி. இதுதான் கதை. அதற்குள் காமெடி, சென்டிமெண்ட் என பிரமாதப்படுத்தியிருக்கிறார் விக்ரம் குமார்.
ஒளிப்பதிவும் ஏராளமான கோணங்களோடு அசத்துகிறது. ஸ்டைலீசான படம். நீங்கள் ரசித்துப் பார்க்கலாம். அந்த நம்பிக்கையை விக்ரம் குமார், யாவரும் நலத்திலிருந்து தக்கவைத்து வருகிறார். இந்த படம் அவருக்கும் நானிக்கும் செம பூஸ்ட் அளித்திருக்கிறது. காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கும் என்பதை நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லைதானே.
மற்ற யார் மீதும் புகார் சொல்ல ஏதுமில்லை. நானியை நீங்கள் நம்பி போகலாம். சந்தோஷமாக படம் பார்த்துவிட்டு வரலாம்.
கோமாளிமேடை டீம்