உலகின் இரண்டாவது சர்ச் எஞ்சின் எது? - ஜிபி வலைத்தளம் பிறந்த கதை!





C'mon, Alex, you got this!



ஜிபி எனும் ஜிஃப் படங்களுக்கான வலைத்தளம்தான் இந்த சாதனை செய்துள்ளது. கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகளவு தேடுதல் தகவல்களை இத்தளத்தில்தான். அலெக்ஸ் சுங் இந்த தகவலைச் சொல்லி பரவசப்படுத்திய நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

எங்களுடைய வலைத்தளம் கூகுளுக்கு மிக அருகில் இருக்கிறது. ஒரு நாளுக்கு 9 பில்லியன் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தகவல் போட்டியில் கூகுளை நாங்கள் ஒப்பிடவில்லை. உணர்வுகள், கலாசாரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் பல்வேறு திரைப்பட நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம் என்று கூறினார் அலெக்ஸ் சுங்.

எப்படி இப்படியொரு தளத்தைத் தொடங்கினீர்கள் என்று கேட்டோம். அதற்கு, நான் நண்பர்களுடன் விளையாட்டாக  தொடங்கிய வலைத்தளம் இது. சவால் இதுதான். நான் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆனால் எனக்கு நிறைய மொழிகள் தெரிந்தால்தான் அது சாத்தியம். படங்கள் கூட உதவும். ஆனால் அது டைனமிக்காக இயங்கும்படி இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்தோம். ஜிபி பிறந்தது. என்று கூறியவர் ஜாலியாக இதற்கு ஒரு ஜிஃப் போட்டோ கொடுங்கள் என்றோம். நிறைய வெட்கப்பட்டார்.

நன்றி - நியூ அட்லஸ்