நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?





Working Speak Now GIF by Taylor Swift

தெரிஞ்சுக்கோ!

பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள்.



அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.

ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர்.

கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள்.


யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது, பங்குச்சந்தையில் கம்பெனியின் வளர்ச்சி 6 சதவீதம் உயர்ந்தது.

ஆண் இயக்குநர்களுக்கு பெண் இயக்குநர்களுக்குமான சம்பள வேறுபாடு 20 சதவீதம் உள்ளது.

பெண்கள் உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது  நூறு ஆண்களுக்கு 77 என்ற அளவில் உள்ளது.

ஃபார்ச்சூன் இதழில் தேர்ந்தெடுக்கப்படும் 500 நிறுவனங்களில் இயக்குநராக உள்ள வெள்ளை ஆண்களின் எண்ணிக்கை 72 சதவீதம். இவர்களின் பதவி மூத்த மேலாளர். 

இதில் இயக்குநர்களாக உள்ள பெண்களின் சதவீதம் 6.4 சதவீதம்.

வெள்ளை இன ஆண் ஒருவர் இயக்குநராக இருந்தால் எவ்வளவு காலம் அதில் நீடிக்கிறார்?  6 ஆண்டுகள். அதுவே ஆசியாவைச் சேர்ந்தவர் என்றால் மூன்றே கால் ஆண்டுகள்தான்.

நன்றி - க்வார்ட்ஸ்