வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?
மிஸ்டர் ரோனி
ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்?
குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும்.
உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான்.
நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்