போதை, வல்லுறவு கொலை - எலக்ட்ரீசியன் முதல் சீரியல் கொலைகார பயணம்!



Image result for dean corll
டீன் கோரல் சிறுவயதில்....



அசுரகுலம்

டீன் கோரல்

கோரலுக்கு எதுவுமே நீட்டாக இருக்கவேண்டும். உடை முதல் தான் செக்ஸ் வைத்துக் கொண்டு கொல்லும் இளைஞர்கள் முதற்கொண்டு அப்படித்தான். ஃபிளைவுட் டேபிளில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் தான் வெட்டும் சதையின் துணுக்குகள், மலம், வாந்தி எல்லாம் வந்து விழ வேண்டும் என நினைப்பார் கோரல். அனைத்தும் யாருக்கும் தெரியாமல்தான் நடந்து வந்தது. கோரலும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு அசுர ஆட்டம் ஆடினார். 


ஆனால் நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி.  காவல்நிலையம். டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்த வந்த போன் அழைப்பு அது. இளைஞன் ஒருவன் பதற்றத்துடன் பேசினான். இங்கு நான் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டேன். சீக்கிரம் வாங்க சார் என்ற அவனின் குரலில் வழிந்த பதற்றத்தை போலீசார் விரைவில் உணர்ந்தனர். போனை வைத்துவிட்டு சைரன் ஒலிக்க காரை கிளப்பினர். முகவரி? 2020 லாமர் ட்ரைவ். அவர்கள் அங்கே சென்று சேரும் முன், போனில் அழைத்த ஹென்லி பற்றி பார்த்துவிடுவோம்.

ஹூஸ்டன் என்ற பகுதி, நகரின் குற்றங்கள் மலிந்த இடம். அங்குதான் கோரல் வாழ்ந்து வந்தான். தன் அம்மாவின் மிட்டாய்கடை அங்கு இருந்தது. சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இப்படி எப்படியோ அவனுக்கு தோழனாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானான் ஹென்லி. சிகரெட், மது, கஞ்சா என அனைத்திற்கும் கோரல் பணம் கொடுப்பான். எதற்கு இந்த சலுகை, கேள்வி உங்கள் மனதில் வந்திருக்க வேண்டுமே?  ஹென்லி தனக்குத் தெரிந்த பக்கத்து குடியிருப்பு சிறுவர்களை, சிறுமிகளை அழைத்துக்கொண்டு வந்து கோரலுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை கோரல் வல்லுறவு செய்வான். அதற்கப்புறம் சித்திரவதை செய்து கொலை. முதலில் திக்கென இருந்தாலும் ஹென்லி அதற்குப் பழகிப்போனான்.

காரணம், கட்டற்ற காசு. வீட்டில் கொடுக்கமாட்டார்கள். ஆனால் கோரல் கொடுக்கிறான். அவன் தன்னைக் கொல்லவில்லை. மற்றவர்களைத் தான் கொல்கிறான் என விட்டுவிட்டான். ஆனால் கோரல் அறியாமல் ஹென்லிக்கு பெண் தோழி ஒருத்தி இருந்தாள். அவளை ஒருநாள் கோரலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அதுதான் அவன் செய்த பெரும் தவறு. தனக்கான இரை என கோரல் அப்பெண்ணை நினைத்தான். கோரலுக்கு செஞ்சோற்று கடன் அடைக்க, ஹென்லி தனக்கான இரைகளைத் தேட மற்றொரு நண்பனை கூட பங்காளி ஆக்கினான்.

போகத்திலும்தான், குற்றங்களிலும்தான். அவன் பெயர், டேவிட் ஓவன் ப்ரூக்ஸ். இருவரும் சேர்ந்து காரில் சுற்றுவார்கள். சிறுவர்களிடம் பார்ட்டி என்று சொல்லி காரில் ஏற்றிக்கொண்டு கோரலின் வீடு வருவார்கள். சிறுவனுக்கு போதைப் பொருட்கள், மது, சிகரெட் என அனைத்தும் வழங்கப்படும். போதையில் மூழ்குபவனுக்கு தான் எங்கோ அழைத்து செல்லப்பட்டு கைகளிலும் கால்களிலும் நைலான் கயிற்றில் கட்டிவைக்கப்படுவது தெரியவா போகிறது? அலறினாலும் வெளியில் கேட்காதவாறு வீடு தனியாக இருந்தது. கூடுதலாக ரேடியோ வேறு கர்ணகடூரமாக ஒலித்து அலறலைத் தடுத்தது.


பின்னர்தான் வேலை தொடங்கும். செக்ஸ் சமாச்சாரம் முடிந்தவுடன் கோரல் தன் பொருட்களை எடுப்பான். கத்தி, சுத்தி, இறைச்சிக்கத்தி என இருக்கும் ஆயுதவரிசை அது. அதில் நேரம் போல ஏதோவொன்றைத் தேர்ந்தெடுத்து வெட்டி சிறுவர்களை கூறுபோடுவான். சிந்தும் ரத்தம், மலம் எல்லாவற்றையும் வழித்துப்போட பிளாஸ்டிக் ஷீட் இருக்கிறது. இதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் ஹென்ட்லி, ப்ரூக்ஸ் உதவுவார்கள். ஆனால் அவர்களையே கோரல் ஒருநாள் பதம் பார்த்தான்.

அன்று கடும் போதையிலிருந்த ஹென்லி, பிளைவுட்டில் கட்டப்பட்டிருந்தான். சுத்தியுடன் வேகமாக அவனை நெருங்கினான் கோரல். மெதுவாக கண்விழித்தவன் நிலைமை புரிந்து அலறினான்.

என்னைக் கொல்லாதே. என்னை அவிழ்த்துவிட்டால் ப்ரூக்ஸையும், ரூண்டாவையும் நானே என் கையால் கொல்கிறேன்.

கோரலுக்கு என்ன தோன்றியதோ, உடனே வேகமாக அவனை அவிழ்த்துவிட்டான். டேபிள் மீதிருந்த துப்பாக்கியைக் கொடுத்தான். உடனே துப்பாக்கியை கோரலுக்கு குறிபார்த்து ஆறுமுறை சுட்டான். கிருஷ்ணர் குந்திக்கு வாக்கு கொடுத்தது போல,  அந்த குற்றம் செய்யும்போது ஹென்லிக்கு கைநடுங்கவில்லை. பிறகுதான் போலீசுக்கு அந்த போன் அழைப்பு.

மின்சார நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துவந்த டீன் கோரலுக்கு அப்படியொரு எதிர்மறையான முகம் இருக்கும் என உலகம் எதிர்பார்க்கவில்லை. 1970 முதல் 1973 வரை 24 இளைஞர்களை சித்திரவதை செய்து வல்லுறவுக்குள்ளாக்கி கொன்று புதைத்திருந்தார் கோரல்.


நன்றி -

தி கில்லர் புக் ஆஃப் சீரியல் கில்லர்ஸ் நூல்

ஆல் தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்














பிரபலமான இடுகைகள்