தகவல் சுருக்கம் - டேட்டா கம்ப்ரஸ்ஸன் - தெரிஞ்சுக்கோ!




fun post GIF






தெரிஞ்சுக்கோ!


தகவல் சுருக்கம் என்பது இன்று பழைய வார்த்தை போல தோன்றும். ஒன்றுமில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களில் தேவையில்லாதவற்றை நீக்கினால் அதுதான் தகவல் சுருக்கம். இதுபற்றி தி நியூ கைண்ட் ஆஃப் சயின்ஸ் என்ற நூலில்,  மோர்ஸ் கோட்  எனும் தகவல் சுருக்க முறை 1838 ஆம் ஆண்டு தோன்றியது. இதில் e மற்றும் t  என்ற எழுத்துகளைத் தவிர்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்தன.


தகவல் தொழில்நுட்ப தியரின் தந்தையாக கிளாட் ஷனான் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். தகவல் வேகமாக சென்று சேரவேண்டும். அதேசமயத்தில் அதன் தரமும் குறையக்கூடாது என்று அன்றிலிருந்து இன்றுவரை டெக் கம்பெனிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள். அனைத்து மென்பொருட்களுக்கும் கருவிகளுக்கும் பொருந்தும் கோப்பு முறைகள் உருவாகுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது.

அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம்.

1867 இல், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை பதிப்பாளர் ஜோசப் மெடில், முடிந்தளவு எழுத்துகளை சிக்கனமாக பயன்படுத்துவதை ஆதரிப்பவர். இப்படித்தான் ஃபேவரிட் என்ற எழுத்திலுள்ள இ எழுத்தை அகற்றலாம் என பரிந்துரைத்து பேசினார்.

1929 ஆம் ஆண்டு ரே கெல் என்பவர் வீடியோ சுருக்கத்திற்கான காப்புரிமை கோரினார்.

1934 ஆம் ஆண்டு ட்ரிப்யூன் பதிப்பாளரான மெடிலில் பேரன் ராபர்ட் ஆர் மெக்கார்மிக்  அனலாக், கேன்சல்டு, ஹாக்கி, டாக்ரின் ஆகிய வார்ச்சைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

1948 இல் கிளாட் ஷனோன், ராபர்ட் ஃபனோ ஆகியோர் தகவல் சுருக்கத்திற்கான ஷனோன் ஃபனோ கோடிங்கைக் கண்டுபிடித்தனர்.

1974 ஆம் ஆண்டு நாசிர் அஹ்மது என்பவர் டிஸ்கிரிட் காசைன் முறையில் ஜேபெக், எம்பெக் ஆகிய முறைகளை உருவாக்கினர்.


1976 ஆம் ஆண்டு ஜோர்மா ரிசானென் மற்றும் ரிச்சர்டு பாஸ்கோ ஆகியோர் கோடிங் எழுதி ஜேபெக் ஹெ.264 என்ற ஃபார்மட்டை உருவாக்கினர்.

1977 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் லெம்பெல் மற்றும் ஜேக்கப் ஜிவ் ஆகியோர் ஜிப் மற்றும் ஜிஃப் பார்மட் கோப்புகளை உருவாக்கினர்.

1986 ஆம் ஆண்டு பில் கட்ஸ் என்பவர் ஜிப் கோப்பு முறையைக் கண்டுபிடித்தார். அப்போது அவரின் வயது 24.


1987 கம்யூசர்வ் நிறுவனம் GIF என்ற பார்மட்டை உருவாக்கி வெளியிட்டது.


1992 ஆம் ஆண்டு, ஜேபெக் பார்மட் உருவானது. அடோப் நிறுவனம் பீடிஎஃப்பை உருவாக்கியது.

1993 ஆம் ஆண்டு நாம் இசைக்கோப்புகளை இன்றுவரை கேட்கிறோமே அந்த எம்பி3 கோப்பு ரகம் உருவானது.


நன்றி - க்வார்ட்ஸ்