பசியில் தவிக்கும் இந்தியா- அவலமாகும் குழந்தைகளின் நிலைமை!




 
Global Hunger Index
           



2015 ஆம் ஆண்டு இந்தியா குளோபல் ஹங்கர் இண்டெக்ஸில் 93 ஆவது இடத்தில் இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை மாறியிருக்கிறது. பொது விநியோக முறையை உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்திய அரசு குறைத்து வருகிறது.

அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் அரசின் பொறுப்பு குறைந்துகொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், உடல்நலம், வேலைவாய்ப்பு அனைத்திலும் அரசு மெல்ல தன் பொறுப்பை கைகழுவி சூப்பர்வைசர் பொறுப்பை மட்டுமே ஏற்கிறது.

இதன்விளைவாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ஹங்கர் இண்டெக்ஸ் பட்டியலில் 30.3 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் விளைவாக 102 ஆவது இடத்தைப் பெற்று தெற்காசிய நாடுகளிலேயே, பிரிக்ஸ் நாடுகளிலேயே கீழே போய்விட்டது.

அதேசமயம் இந்தியாவில் பசுமாடுகளின் பெருக்கம் பதினெட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பெருமையாக கருதுவதா, இதையொட்டி அடித்துக்கொல்லப்படும் சிறுபான்மையினரை நினைத்து பீதி ஆவதா என்று தெரியவில்லை. ஆறு வயது முதல் 23 வயது வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்களின்றி பாதிக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் அளவு 90 சதவீதம். அதாவது, பத்து சதவீத த்திற்கும் (9.6%) குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே சரியான உணவு கிடைக்கிறது.

உணவு என்பதற்கு குடும்பம் சார்ந்த சிக்கல்கள், வேலையின்மை, ஊதியம் ஆகியவையும் முக்கியமான காரணங்களாக குறிப்பிடலாம். இப்பட்டியலில் 20 முதல் 34.9 என புள்ளிகளைப் பெறுவது நாடு ஆபத்தான நிலையில் பயணிக்கிறது என எச்சரிக்கும் அலாரம் எனக் கொள்ளலாம். 35-49.9- 50 என்றால் பிரதமர் மட்டுமல்ல ஆட்சியை மாற்றி உடனடியாக குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான வேலையைப் பார்க்கவேண்டும்.


நன்றி - டைம்ஸ்








பிரபலமான இடுகைகள்