காந்தி தன் வாழ்வில் கண்ட மகத்தான எதிரி!
காந்தியின் மகத்தான எதிரி!
பி.ஏ.கிருஷ்ணன்
ஈ.வி. ராமசாமி நாயக்கர் என்ற பெயரைக் கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? உறுதியான உண்மையைப் பட்டென்று பேசும் குரல்தானே! இருபதாம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தவாதிகளில் பெரியாருக்கு முக்கியமான இடமுண்டு. அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார், மக்களின் தலைவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுடன் பேசுவதற்காகச் செலவிட்டு பரிசாக செருப்புகளையும் கற்களையும் பெற்றவர். ஆனால் தன் வாழ்நாள் முழுக்க சுயநலமாக மட்டும் செயல்படவில்லை.
காந்தியின் மகத்தான எதிரிகளில் மூன்று முக்கியமானவர்கள் உண்டு. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் காந்தியைப் பற்றிய கருத்துகளை திடமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதில் பெரியார் மூன்றாவதாக வருகிறார். தமிழ் பேசாதவர்களுக்கு பெரியார் அறியப்படாதவராக இருப்பார். ஆனால் அவரின் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்பவர், தீவிரமான அவரின் விசுவாசியாக மாறுவது நிச்சயம்.
இன்றும் கூட பெரியாருக்கு அவரின் முழு அரசியல் சமூக வாழ்க்கையைப் பேசும் வரலாறு கிடையாது. திராவிட இயக்கம் வெளியிட்ட வரலாறு போல் அல்லாது தமிழ் அல்லாதவர்களும் படிக்கும்படி இருப்பது அவசியம் என்ற வரையறையை கவனத்தில் கொள்ளுங்கள்.
பெரியார் அரசியலில் நுழைந்தது காந்தியின் தொண்டராகத்தான். தன் மத்திய வயதில் காங்கிரஸ் கட்சி தொண்டராக அரசியலுக்கு வந்தார். அப்போது சுயராஜ்யம் பற்றி காந்தி அறிவித்திருந்தார். ஊர் மக்கள் என்னை முட்டாள் என்று கூறினர். இதற்கான கருத்தை பரப்புவதில் பெரியாரும், ராஜாஜியும் ஈடுபட்டிருந்தனர் என்று சுதந்திரப் போராட்ட வீரரான டி.எஸ்.எஸ் ராஜன் தன் நூலில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான ஆண்டு 1947.
1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் உருவானது. அதனை பிரசாரம் செய்த பெரியார் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளராக உருவாகியிருந்தார். அவரின் எளிமையான பேச்சுக்கு பெரும் மக்கள் திரள் திரண்டது. அப்போது பெரியார் கள் கடைகளுக்கு எதிரான போராட்டங்களையும் செய்தார். காதிதுணிகளை விற்றுவந்ததோடு, தன் கருத்துகளைப் பேசுவதற்காக குடியரசு இதழையும் தொடங்கினார். காந்தி நீடுழி வாழ்க் என்ற சுலோகத்துடன் பத்திரிக்கை தொடங்கினார் பெரியார். அனைத்து உலக நாடுகளும் காந்தியின் ஆலோசனைகளை கேட்க காத்திருக்கின்றன. ஜீசஸ் கிறிஸ்துவுடன் அவரை ஒப்பிட்டு பேசுகின்றனர் என்று பேசிய பெரியார், பின்னாளில் காந்தியை தன் ஆகப்பெரும் எதிராக கருதினார்.
1973 ஆம் ஆண்டு சாதி,மதம், காந்தி, காங்கிரஸ், பிராமின்களை ஒழிக்க வேண்டும். இதில் காந்தியை ஒழிப்பதில் பிராமின்கள் முந்திக்கொண்டனர். நமக்காகச் செய்து முடித்துவிட்டனர் என்று பேசியவர் பெரியார். 1948 ஆம் ஆண்டு காந்தி இருந்த பக்குவத்தில் 1927 இல் இல்லை. அப்போது பேசிய வருணாசிரம ஆதரவு பேச்சு, பெரியாரை கடும் கோபத்தில் தள்ளியது. எனவே அவரின் நிலைப்பாடு முழுக்க காந்திக்கு எதிராக திரும்பியது. பாகிஸ்தான் உருவாகுவதை ஆதரித்து திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தது இப்படித்தான் தொடங்கியது.
“காந்தி எங்களது சாதி,மதம் ஒழிப்பு, பிராமணர்கள் ஒழிப்பு விஷயங்களுக்கு போதுமான சம்மதம் வழங்கவில்லை” என்று பெரியார் கூறினார். 1957 இல் பெரியார் காந்தியின் உருவப்படங்களை தொண்டர்களை விட்டு எரித்தார். காந்தி நம்மை ஏமாற்றிவிட்டார். அவர் நமது நிலத்தில் பிராமணர்களுக்கு அடிமையாக நம்மை இருக்கும்படி மாற்ற நினைக்கிறார். இப்படி நேர்மையில்லாமல் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறாரா என்று அதிர்ச்சியாக இருக்கிறது என்று பேசினார் பெரியார். காந்தியை எதிர்ப்பது என்று தொடங்கிய சைமன் கமிஷனை ஆதரித்தது, ஆங்கிலேயருக்கு ஆதரவான நீதிக்கட்சியில் சேர்ந்தது, பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று சென்றார்.
பெரியார் அனைத்து பிரச்னைகளையும் பேசினார். அத்தோடு அதற்கான தீர்வையும் தன் கையிலேயே வைத்திருந்தார். கீழ்வெண்மணி தொழிலாளர்கள் பிரச்னையில் பெரியாரின் நிலைப்பாடு அரசின் பக்கமாகவே இருந்தது போன்ற கறைகள் தவிர பெரியார் மக்களுக்கான தலைவராகவே இருந்தார். அவர் சாக்ரட்டீஸ் போன்றவரல்ல. ஆனால், எளிய தீர்வுகளை தன்னோடு கொண்டிருந்தவர்.
நன்றி: அவுட்லுக், 150 ஆவது சிறப்பிதழ்