தமிழ் சினிமாவும் நாவல்களும்! - ஒரு அலசல்!






Image result for poomani
எழுத்தாளர் பூமணி




வெற்றிமாறன் அசுரன் படத்தை வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்து ஜெயித்துவிட்டார். உடனே டெலிகிராம் குழுக்கள் முழுக்க விழிப்புணர்வு பெற்று நூலை பீடிஎஃப்பாக படித்தே ஆக வேண்டும் என இறங்கிவிட்டனர். வெற்றிமாறன் தன் விசாரணை படத்தை லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கினார்.

நாவல்கள் எல்லாம் வேண்டாம் என கொரிய படங்களை மூலமாக வைத்து மிஷ்கின் போன்றோர் துப்பறிவாளன், முகமூடி என படமாக்குகின்றனர்.

நாவல்களை படமாக்குவது புதிதல்ல. பாலச்சந்தர் எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை படமாக்கியிருக்கிறார். இவரது ஒரு சிங்கம் முயலாகிறது என்ற கதையை முக்தா சீனிவாசன், அவன் அவள் அது என படமாக்கினார். 1970 காலகட்டத்தில் ஜெயகாந்தன், சிவசங்கரி, அனுராதா ரமணன் ஆகியோரின் நாவல்களைத் தழுவி நிறைய படங்கள் வெளியாகின. அக்காலகட்டம் குடும்பம், காதல், முரண்பாடுகள், சீர்திருத்தம், மரபுகளை மீறுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு வரவேற்பு இருந்தது. எழுத்தாளருக்கும், அதை படமாக தழுவி எடுக்கும் இயக்குநருக்கும் கருத்து ஒற்றுமை அவசியம். இல்லையென்றால் நாவல் படமாக உருவாகாது.

அப்படி வென்ற எழுத்தாளர்கள்  சிலரைப் பார்ப்போம்.

ஜெயகாந்தன் 1934-2015

பத்ம பூஷண் விருது பெற்ற எழுத்தாளர். தன் வாழ்நாளில் 40 நாவல்கள், 200 சிறுகதைகளை எழுதியுள்ளார். இரண்டு சுயசரிதைகளையும் எழுதினார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் - 1977 இல் எழுதிய இந்த நாவலுக்காக்க ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது வென்றார். பெண்களின் பாலியன் சுதந்திரம் பற்றிப் பேசிய படம் இது. பின்னாளில் பீம்சிங் இதனை படமாக இயக்கினார்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - 1978

சுயசரிதை நாவலான இதனையும் பீம்சிங் படமாக உருவாக்கினார்.


சுஜாதா - 1935-2008

வெகுஜன எழுத்தாளர். சுருக்கென்ற தீமில் எழுதுவார். கணேஷ்-வசந்த் ரக டிடெக்டிவ் நாவல்களில் பிரசித்தம் பெற்றவர். எழுத்தில் அறிவியல் விஷயங்களை நிரப்பி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முயற்சித்தார்.


காயத்ரி - 1977 ஆர்.பட்டாபிராமன் என்பவர் இந்த நாவலை படமாக்கினார். ரஜினி ஆபாச பட தயாரிப்பாளராக நடித்திருப்பார். அவரை விட வலுவான பாத்திரம் ஜெய்சங்கருக்கு கிடைத்தது. ரசிகர்கள் விரும்பிய கதாபாத்திரம் இது.


விக்ரம் - 1986 ராஜசேகர் இயக்கிய படம். கமல் நாயகனாக நடித்திருப்பார். தீவிரவாதிகள், ஏவுகணைகள் என படம் பரபரவென பாயும்.

சிவசங்கரி

1942 ஆம் ஆண்டு பிறந்த எழுத்தாளர். சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை பற்றி எழுதியுள்ள முக்கியமான எழுத்தாளர்.

அவன் அவள் அது - 1980

ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலை திரைப்படமாக்கினர். முக்தா சீனிவாசன் இதனை இயக்கினார். தவறான உறவால் நடைபெறும் கர்ப்பம் தொடர்பான கதை. தெலுங்கு மற்றும் இந்தியிலும் படம் உருவாக்கப்பட்டது.


குட்டி - 2001

குழந்தை தொழிலாளர் பற்றி கதையை சிவசங்கரி எழுதினார். இதுவும் வணிக ரீதியான படமாக உருவாக்கப்பட்டது.

அனுராதா ரமணன்

1947-2010

30 ஆண்டுகளில் 800 நாவல்கள், 1230 சிறுகதைகள்  எழுதியுள்ளார். அனைத்துமே குடும்பம் சார்ந்த கதைக்களம்தான்.


ஒரு வீடு இரு வாசல் - 1990

மீண்டும் மீண்டும் என்ற நாவலை பாலச்சந்தர், மேற்சொன்ன தலைப்பில் படமாக எடுத்தார். தேசிய விருது வென்ற படம் இது.


சிறை - 1984

இதே பெயரில் திரைப்படத்தை ஆர்சி சக்தி இயக்கினார். ஒரு திருமணமான பெண் வல்லுறவு செய்யப்படுகிறாள். அவளை அவளது கணவன் கைவிடுவது பற்றிய கதை இது.

நன்றி: டைம்ஸ்