காசைத் திருப்பிக் கொடுங்க ப்ரோ! - மேட்ரிமோனியல் காமெடி




Matrimonial Agency
டைம்ஸ்!




திருமணங்களுக்கான சரியான வரன்களைத் தேடிக் கொடுப்பது முக்கியமான பணி. அதேசமயம் சரியாக அமைந்தால் மட்டுமே காசு  கிடைக்கும். இல்லையென்றால் அவமானமும், வசைபாடலும்தான் மிச்சம்.

பஞ்சாபின் மொகாலியில் சரியான வரன் பார்த்துக்கொடுக்காத கல்யாண ஏஜன்சி இழப்பீடு தரும் அவலத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன ஆச்சு....

நொரைன் என்ற டாக்டர் பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் புராஜெக்ட். அதில்தான் ஏஜன்சி சறுக்கியிருக்கிறது. 2017இல் இருந்து வரன் தேடி ஓய்ந்திருக்கிறது ஏஜென்சி.

பணக்கார ர்கள் இல்லையா? 50 ஆயிரம் கட்டி ப்ரீமியமாக வரன் தேடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட நகரில் இருப்பவராக, ஜாட் சாதியைச் சேர்ந்தவராக, டாக்டராக இருக்கவேண்டும்  என்பதுதான் விதி. ஏஜன்சி கொடுத்த வரன்களை எல்லாம் ஊதித்தள்ளியிருக்கிறது பெண் தரப்பு. காரணங்களுக்கா பஞ்சம்?

அப்புறம் பணத்தைக் கேட்டிருக்கிறது பெண் தரப்பு. பின்னே வேலை ஆகவில்லையே... பணம் தர முடியாது என நிறுவனம் சொல்ல நுகர்வோர் கோர்ட்டுக்கு படி ஏறியிருக்கிறது மருத்துவர் தரப்பு.

கோர்ட் மனுவை பரிசீலித்து 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. இதெல்லாம் தேவையா என நொந்துபோயுள்ளது மேட்ரிமோனியல் நிறுவனம்.