கற்பழிப்பிலும் காட்டிய கருணை - பாபிக்கு ஆப்பு!
பாபி ஜோ லாங்
3
பாபிக்கு மனைவியிடம் மூன்று முறை இசைவாக செக்ஸ் அனுபவித்தாலும் ஏதோ ஒன்று குறைந்தது. எனவே, அவரிடம் உடலுறவு அனுபவிப்பதைக் குறைத்துக்கொண்டு தனக்கான இரையை வெளியில் தேடத் தொடங்கினார். புளோரிடாவில் உள்ள மியாமி, ஓக்லா ஆகிய ஏரியாக்களைத் தேர்ந்தெடுத்தார். முந்தை அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போலத்தான். பொருட்களை விற்கும் விளம்பரங்களை உள்ளூர் நாளிதழில் படித்துவிட்டு முகவரியைக் குறித்துக்கொள்வார். பின் நேராக நடையைக் கட்டி, வீட்டைச் சுற்றி நோட்டமிடுவார். பெண்கள் இருப்பது தெரிந்தால் களத்தில் இறங்கிவிடுவார்.
வீட்டுக்குள் சென்று பொருட்களின் விலை விசாரிப்பார். வலுவான ஆண்கள் இல்லையென்றால் ரைட் என பெண்களை மிரட்டி, கட்டிப்போட்டு முடிந்தளவு வன்புணர்வு செய்துவிடுவார். அவ்வளவுதான். விடுவென கிளம்பி வந்துவிடுவார். இம்முறையில் 1980 -83 வரையில் பதினைந்து வல்லுறவுகளை வெற்றிகரமாக செய்தார். பின்னர் புகார் போலீசுக்குப் போனது. தீவிரமாக பாபியைத் தேடினர். அதோடு விட்டார்களா? வான்ட் ஏட் ரேபிஸ்ட் (want ad rapist) என்ற பெயரில் நோட்டீஸ் அடித்து ஒட்டி தேடி வந்தனர்.
பாபிக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் விரும்பியது அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்ததில்லை. தாய் பல்வேறு ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கினார். அவருடன் பாபியும் கூடத்தான் இருந்தார். சிறுவன்தானே என இருவருக்கும் ஒரே அறைதான் எடுப்பார் தாய். பொருளாதார சிக்கனம் மற்றொரு விவகாரம் என வைத்துக்கொள்ளுங்கள். ஆச்சா....ஹோட்டல் பணியாளராக வேலைசெய்து வந்த அம்மா எப்படி உடை உடுத்துவார் என்று நீங்கள் அறிவீர்கள்.
மகனாச்சே என்று அம்மா எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. அதாவது, சரியாகத்தான் உடை உடுத்தினார் என்று சொல்ல வந்தேன். ஆண் சின்னவனோ பெரியவனோ, பெண் எப்படி உடை உடுத்த வேண்டுமோ அப்படித்தான் உடை உடுத்தினார். இந்த கேள்வியை பின்னர் ஊடகங்கள் எழுப்பின. அங்கிருந்த தற்காலிக குடும்பம் என்ற சட்டகம் இயல்பாகவே குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தத்தை தந்திருக்கின்றன.
தனக்கு அம்மா அப்போது தேவை, அவளை கட்டிப்பிடித்து தூங்கவேண்டும் என்று பாபி நினைத்தால் அதை செய்யவும் முயன்று வென்றான். அம்மாவை எங்கேயும் நகர விடாமல் கட்டிப்பிடித்து ஓவென்று அழுவது... காதலனை சந்திக்கும் திட்டத்தில் இருந்தால் கூட மகனின் அழுகை தாயை கலைத்துவிடும்தானே?
பெண், ஆண் இணைகளைத் தேடுவது என்பது அமெரிக்கச் சமூகத்தில் இயல்பான விஷயம். பெண்களுக்கு குழந்தை இருக்கிறது என்பது அங்கே விஷயமே இல்லை. இளமை இருக்கிறதா? அதுவே போதும். தாய் அப்படித்தான் தேடிப்போனார். ஆனால் இதெல்லாம் பாபிக்கு புரியவில்லை. கடும் கோபம் கொண்டார். அதனை வெளிக்காட்டாமல் தனியாக தூங்கப்பழகினார். இருவரும் இயல்பாகவே சந்திக்க நேரமிலை. பாபி பள்ளிக்குச் செல்லும்போது தாய் வீட்டுக்கு அதாவது விடுதி அறைக்கு வருவார். ஹாய் சொல்லிக் கொண்டு அவரவர் வேலையைப் பார்ப்பார்கள்.
இப்போது கிரைமுக்கு வருவோம். பாபி வியட்நாமைச் சேர்ந்த ஜியோன் தி லாங் என்ற பெண்ணை வல்லுறவு செய்து கொன்றார். பெண்ணை காரில் தூக்கிப்போட்டு கன்னத்தில் அறைந்து விளையாட்டு தொடங்கும். பின்னர் திகட்டத் திகட்ட செக்ஸ். இறுதியில் மூச்சை நிறுத்திக் கொலை. இம்முறையில் அப்பெண்ணை கொல்வதில் செக்சை மிஞ்சிய மகிழ்ச்சியை மனதில் உணர்ந்தார் பாபி. உடலை சாலையோரத்தில் வீசினார். கற்பழித்து கொன்ற பெண்களை குறைந்தபட்சம் 26 மணிநேரம் சித்திரவதை செய்து திரும்பத் திரும்ப செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது பாபியின் ஸ்டைல்.
தன்னுடைய காரின் சீட் அமைப்புகளை மடக்கினால் சமதளமாக இருக்கும் படி செய்திருந்தார். இதில் அமர்ந்து வரும் பெண்ணை கால், கையைக்கட்டி விடுவார். பின்னர் அவளது தலை வெளியில் தெரியாதபடி அமுக்கிப்போட்டு, ஒரு கையால் ட்ரைவிங். மறுகையால்... அதே சமாச்சாரம்தான். செய்து கொண்டே வருவார். அப்புறம் அதுவும் சலித்தால் செக்ஸ், பின் கொலை. இதுதான் பாபியின் புரோகிராம் சார்ட். மனைவி 1980 இல் விவாகரத்து பெற்றுவிட்டதால், கிடைக்கும் பெண்களை வீட்டுக்கு கொண்டு போய் வைத்து பிடிஎஸ்எம் முறையில் கட்டிவைத்து சித்திரவதை செய்து கொல்வார் பாபி.
தன்னைச் சந்தித்து கட்டிக்கோ ராசா என்று சொன்ன அனைத்து பெண்களையும் தாக்கி வல்லுறவு செய்து கொன்றார். ஆனால் வடக்கு டம்பா பகுதியைச் சேர்ந்த பெண்ணான கிம் சான் என்பவளை மட்டும் பாபியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வயது 21 என்றாலும் பேருடல் பெண். ஆம். பாபி கிம்மை தாக்கத் தொடங்கியதும், அவரும் பாபியை தாக்க முயன்றார். அலறினார். இவரை சமாளிப்பதில் பாபிக்கு பாதி சக்தி போக, உரிய நேரத்தில் மோட்டார் வேலை செய்யவில்லை. சண்டை போட்டதில் அவரின் சக்தி அத்தனையும் வடிந்து போயிருந்தது. எனவே கிம் ஆன்னை அரைமனதுடன் கொலை செய்தார் பாபி.
பாபி கையில் பட்டு வைகுண்டம் போன பெண்கள் அனைவருமே விலைமாதுக்கள், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள். இவர்கள் யாரையும் பாபி கன்வின்ஸ் செய்து கூட்டி வந்து கசமுசா செய்யவில்லை. அவர்களாகவே பாபியின் காருக்குள் வந்து உட்கார்ந்து எனக்கு ஓகே என்று சொன்னவர்கள்.
கிம் சானைக் கொல்வதற்கு இரு நாட்களுக்கு முன்பு தெருவில் நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார். அழகான உடல் அவளுக்கு என பாபி கணக்குப் போட்டது தப்பவில்லை. பேசியபோது ஆதரவின்றி இருப்பதாக கூறினாள். எனவே அவளை தனது வீட்டிற்கு கூட்டிப்போய், இஷ்டப்படி வல்லுறவு செய்தார். ஆனால் அவளைக் கொல்லவில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா? அவளின் பதினேழு வயது காரணமா? ஆதரவில்லாத நிலை காரணமா என்று தெரியவில்லை.
பின்னாளில் பாபியைப் பிடிக்க இந்தப் பெண்தான் உதவினாள். போலீஸ் பாபியை ஆதாரத்துடன் கைது செய்ய வந்தனர். பாபி அலட்டிக்கொள்ளவில்லை. நானே உங்களைச் சந்தித்து சரண்டர் ஆக நினைத்தேன் என்று சொன்னால் போலீசுக்கும் ஜெர்க ஆகத்தானே இருக்கும்? பின்னர் கணக்கெடுத்தபோது ஐம்பதிற்கும் மேற்பட்ட வல்லுறவுகள், ஒன்பது கொலைகள் வரிசை கட்டி நின்றன. கொலை செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் விலைமாதுக்கள், இருவர் நடனமாடும் பெண்கள், ஒருவர் தொழிற்சாலை தொழிலாளி.
போலீஸ் அவர் பெண்களைக் கட்ட பயன்படுத்திய கயிறுகளைப் பயன்படுத்தி பாபியை கட்டம் கட்டி கண்டறிந்தனர். முதலில் விசாரணையில் கேட்டபோது, எனக்கு வக்கீல் வேண்டும் என்றார். அதை அதிகாரிகள் செய்யவில்லை. பின்னர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டவர், பிணங்களை எங்கே வீசினேன் என விவரங்களை கூறிவிட்டார். ஹில்ஸ்பாரோ கவுன்டி மற்றும் பாஸ்கோ ஆகிய நகர் பகுதியில் செய்த வல்லுறவு கற்பழிப்புகளை அவராகவே ஒப்பித்தார்.
விசாரணையில் பாபியின் தலையில் ஏற்பட்ட விபத்துகள் சரியானபடி நிரூபிக்கப்படவில்லை. 2019 இல் மரணதண்டனை விதிக்கப்பட்டு பாபி கொல்லப்பட்டு விட்டார். விஷ ஊசி போட்டு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
தொகுப்பும் எழுத்தும்
வின்சென்ட் காபோ