கடைசிக்கட்டித் தங்கம் - வியக்க வைத்த தஞ்சை பிரகாஷ்
டிஜிட்டல் உலகில் பிரதிலிபி தமிழ் வலைத்தளம் உட்பட பல்வேறு தளங்களில் நீங்கள் உங்கள் எழுத்துகளைப் பதிப்பிக்க முடியும். இதுவரையில் நான் எழுதிய தொகுத்த நூல்களை பலரும் எளிதில் படிக்க முடியும்.
தனியாக நூல் எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டாலும், என்னால் அதிக நேரம் ஒரு நூலுக்காகச் செலவிடுவது கடினமாக உள்ளது. காகித வடிவில் நான் எழுதியதைப் பார்த்து மகிழ்வது முன்னர் கனவாக இருந்தது. விரைவில் அந்த போதையிலிருந்து வெளிவந்துவிட்டேன். சரியோ தவறோ தெரியவில்லை. அதுபற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. முறைப்படி குறிப்பிட்ட இதழுக்காக எழுதும் எழுத்துகளை நான் வெளியில் இணையத்தில் பிரசுரிக்க ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும். அதைப்பெற்று இணையத்தில் பதிவேற்றிவிட்டு தினகரனிலிருந்து வெளியேறினேன். கூடவே அந்த இதழில் எழுதிய பேராச்சி கண்ணன், சக்திவேல் ஆகியோரின் எழுத்துகளையும் இணையத்தில் பதிவு செய்துவிட்டேன். காரணம் இந்த எழுத்துகளை நானே தொகுத்ததுதான் காரணம்.
8
17.11.2018
அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். முத்தாரம் இதழில் வெளியான பசுமை பேச்சாளர்கள் தொடரை மின்நூலாக மாற்றி வெளியிட முயற்சித்து வருகிறேன். சூரியன் பதிப்பகத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது. ஆனால் முத்தாரம் இதழில் வெளிவந்த எதையும் அவர்கள் விற்பனைக்கான விஷயங்களாக பார்ப்பதில்லை. இதில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் எனக்கு நேரம் மிக குறைவாக உள்ளது.
ராமச்சந்திர குஹா நூலில் பெரியார், ராம்மோகன்ராய், கோகலே, அகமதுகான், திலகர் ஆகியோர் பற்றி படித்துள்ளேன். தலைவர்களின் வாழ்க்கையோடு அவர்கள் எழுதிய கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் சிந்தனையை நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. நல்ல ஐடியாவும் கூட.
தொடர்களாக வெளிவரும் எழுத்துக்கள்தான் பதிப்பகத்தில் நூலாக வரமுடியும் என்ற ஐடியா, சரியானதல்ல. இங்கு வேலை செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க நிறுவனம் முன்வரவில்லை. மேலும் எந்த ஊக்குவிப்பும் அளிக்கப்படுவதில்லை. எப்படி நிறுவனம் வளரும்? வேறு இடத்தில் வேலை கிடைக்கும் வரைதான் இங்கு வேலை செய்வோம் என சிலர் தனிப்பட்ட ரீதியில் என்னிடம் கூறினார்கள். கோபமும் இயலாமையும் நூலில் மாற்றமுடியாத தவறுகளாக மாறுகின்றன.
தஞ்சை பிரகாஷின் கடைசிக்கட்டி தங்கம் சிறுகதையை இளங்கோ கிருஷ்ணன் பரிந்துரைத்தார். பிரமாதமான கதை. ஒரு குடும்பத்தை சுயமாக பராமரிக்கும் அக்குடும்பத்தை சாராத ஆண்
என்பதுதான் கதை. அவருக்கு யார் மீது ஆசை இருக்கிறது என பெண்கள் அலைபாய்கிறார்கள். அதில் பட்டுக்கொள்ளாமல் இருக்கிறாள் அப்பெண்களின் தாய். யார் மீது அந்த ஆண் மையல் கொண்டார் என்பதுதான் கதையின் திருப்பம். காதல், காமம் கொண்ட கதைதான். ஆனால் வேறுவிதமாக அதனைக் கூறியிருக்கிறதார் பிரகாஷ். கதை, அதன் சூழல் என விவரிப்பதில் வித்தகர்தான் ஆசிரியர்.
நன்றி! சந்திப்போம்.
ச.அன்பரசு