போதை அடிமைத்தனத்தை மீட்கும் கிராடம்! - தெரிஞ்சுக்கோ
giphy.com |
தெரிஞ்சுக்கோ!
கிராடம் எனும் புதிய போதை மருந்து வந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் விளையும் பசுமையான மரத்தின் இலைகளிலிருந்து கிராடம் தயாரிக்கப்படுகிறது. இம்மருந்து அப்படியே கோகைன் போலவே செயல்படும். தற்போது நிறைய நாடுகள் தடை செய்யவில்லை என்றாலும் விரைவில் தடைக்கு உள்ளாகும் அனைத்து வாய்ப்புகளும் கிராடம் மருந்திற்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் கிராடத்திற்கு பெரும் மவுசு நிலவி வருகிறது. நீங்களும் சற்று முயற்சித்தால் இணையம் வழியாக கூட கிராடத்தை வாங்க முடியும். அசலா, நகலா என்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு.
அமெரிக்காவில் மட்டும் 3.5 மில்லியன் கிராடம் பயனர்கள் உள்ளனர்.
95 சதவீத கிராடம் இந்தோனேசியாவிலிருந்து வருகிறது.
மாதம்தோறும் 440 டன்கள் கிராடம் மேற்கு கலிமன்டன் பகுதியிலிருந்து உலகச்சந்தைக்கு வருகிறது. இது தூய்மைப்படுத்தப்படாத கிராடம் ஆகும்.
இரண்டு டோஸ்கள் என்ற அளவில் 200 மில்லியன் டோஸ்கள் மாதம்தோறும் விற்பனைக்கு வருகிறது. தாயகம் இந்தோனேசியாதான். இதன் மதிப்பு 130 மில்லியன் டாலர்கள் ஆகும். இணையத்தில் நூறு கிராம் கிராடமை நீங்கள் 30 டாலர் விலையில் வாங்கலாம்.
போதைப்பொருட்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்க கிராடம் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு 1836.
2016-17 ஆண்டுகளில் கிராடம் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 91.
நன்றி - க்வார்ட்ஸ்