ஏ.ஐ. பிட்ஸ்! - பின்லேடனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த சூப்பர் கணினி!
தெரியுமா?
செயற்கை நுண்ணறிவு என்பது நமது செல்போன்களின் ஆப்ஸ் தொடங்கி அனைத்து செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இயந்திர வழி கற்றல் என்பது அல்காரிடம் மூலம் தகவல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து கற்பது என்கிறது சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா.
செயற்கை நுண்ணறிவுத்துறை 2030 ஆம் ஆண்டு 15.7 டிரில்லியன் டாலர்கள்( 1 டிரில்லியன் - லட்சம் கோடி) கொண்டதாக வளரும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
உலகம் முழுக்க தானியங்கி கார்களை தயாரிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள், டெக் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்கின்றன. இச்சந்தையின் மதிப்பு 127 பில்லியன் (ஒரு பில்லியன் - நூறு கோடி)டாலர்களாகும்.
உலகிலுள்ள தொழில் நிறுவனங்களில் 70 சதவீதம், 2030க்குள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என ஆய்வு நிறுவனமான மெக்கின்சி கூறியுள்ளது.
காருக்கு எப்படி எரிபொருள் அவசியமோ அதுபோல செயற்கை நுண்ணறிவுக்கான தேவை தகவல்கள்தான். எவ்வளவு அதிகம் தகவல்களை ஏ.ஐ. பெறுகிறதோ அவ்வளவு துல்லியமாக இயங்கும்.
ஏ.ஐ அமைப்புக்கு ஒவ்வொரு முறையும் நடைமுறைக்கான தகவல் தொகுப்பு தேவை இல்லை. எப்படி தேவையோ அதைப்போல செயற்கையாகவும் உருவாக்கும் திறன் கொண்டது. இதனை சிந்தெடிக் டேட்டா என்கிறார்கள்.
நாட்டிலஸ் எனும் சூப்பர் கணினி பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது. அவர் தலைமறைமாக உள்ள தூரத்தைக் கணித்துக்கூறியதுதான் இதற்குக் காரணம். தனக்கு கொடுக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் முடிவுகளைக் கணித்துக் கூறும் திறன் கொண்ட கணினி இது.
அலெக்ஸா, சிரி, கார்டனா ஆகிய ஏஐ உதவியாளர்களின் குரல்களுக்கு ஆண்களை விட பெண்களையே தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் பயனர்கள் பெண் குரல்களையே கேட்க விரும்பினர்.
ப்ரூசல்ஸைச் சேர்ந்த பல்கலைக்கழக (VUB (Vrije Universiteit Brussel) ) ஆராய்ச்சியாளர்கள் ரோபோவுக்கு சேதம் ஏற்பட்டால், தானாகவே தன்னைச் சரி செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.