இடுகைகள்

அறிவியல்- விநோதமனிதர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்ச்சை -சர்க்கஸ் -சாமியார்!

படம்
சர்ச்சை ஆன்மிகவாதி ! எட்கர் ஆலன்போ “Mellonta Tauta" என்ற நாவலில் ஜாக்சன் டேவிசை நக்கல் செய்திருப்பார் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக டூப் சாதனைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுபவர் ஜாக்சன் டேவிஸ் . அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன் டேவிஸ் (1826-1910). குடிகார தந்தையை நம்பாமல் டேவிசும் அவரின் சகோதரியும் சில்லறை வேலைகளைச் செய்து வந்தனர் . கூடவே இரா ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் ஷூ செய்வதில் உதவியாளராக பணியாற்றினார் . பின் 1830 ஆம் ஆண்டு ஆன்டன் மெஸ்மர் என்ற ஜெர்மனி மருத்துவர் காந்தங்களின் மூலம் நோய்களை குணமாக்கும் முறையை செயல்படுத்தி வந்தார் . அதை மெஸ்மரிசம் , ஹிப்னாடிசம் சேர்த்த டேவிஸ் ஏராளமாக பணம் சேர்த்தார் . The Magic Staff, The Principles of Nature, Her Divine Revelation, and a Voice to Mankind ஆகிய புத்தகங்களை எழுதி தன் மருத்துவமுறை பிரபலப்படுத்தி கடும் கண்டனங்களை சந்தித்தார் . டாக்டர் லைசென்ஸ் வாங்கியவர் , நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததோடு Poughkeepsie Seer என்ற பெயரையும் பெற்றார் . தொகுப்பு: கோமாளிமேடை டீம் நன்றி: முத்தாரம்