சர்ச்சை -சர்க்கஸ் -சாமியார்!
சர்ச்சை ஆன்மிகவாதி!
எட்கர் ஆலன்போ “Mellonta
Tauta" என்ற நாவலில் ஜாக்சன் டேவிசை நக்கல் செய்திருப்பார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக டூப் சாதனைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுபவர்
ஜாக்சன் டேவிஸ்.
அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன் டேவிஸ்(1826-1910). குடிகார தந்தையை நம்பாமல் டேவிசும் அவரின் சகோதரியும் சில்லறை வேலைகளைச் செய்து
வந்தனர். கூடவே இரா ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் ஷூ செய்வதில் உதவியாளராக
பணியாற்றினார். பின் 1830 ஆம் ஆண்டு ஆன்டன்
மெஸ்மர் என்ற ஜெர்மனி மருத்துவர் காந்தங்களின் மூலம் நோய்களை குணமாக்கும் முறையை செயல்படுத்தி
வந்தார். அதை மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் சேர்த்த
டேவிஸ் ஏராளமாக பணம் சேர்த்தார். The Magic Staff,
The Principles of Nature, Her Divine Revelation, and a Voice to Mankind ஆகிய புத்தகங்களை எழுதி தன் மருத்துவமுறை பிரபலப்படுத்தி கடும் கண்டனங்களை
சந்தித்தார். டாக்டர் லைசென்ஸ் வாங்கியவர், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததோடு Poughkeepsie Seer என்ற பெயரையும் பெற்றார்.
தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்