பாப்கார்ன் சாப்பிடுங்க!
பாப்கார்ன் சாப்பிடுங்க!
தியேட்டரில் பாப்கார்ன்
வாங்கித்தராமல் அம்பியாய் நின்றால், காதலி என்ன மெட்டி போட்டுவிட்ட
வொய்ஃப்புக்கும் அகோரக் கோபம் கொப்பளித்துக்கொண்டு வரும். பாப்கார்னும்
படமும் மாற்றான் ட்வின்ஸாக மாறிவிட்ட காலமிது.
பாப்கார்ன் புகழ்பெற்றது 1800 ஆண்டுகளில்தான்.
சிம்பிளாக பொறித்தெடுத்தால் சுவை, மணத்துடன் கரகர
மொறுமொறு பாப்கார்ன் பலரையும் ஈர்க்க, 1885 ஆம் ஆண்டு பாப்கார்ன்
மேக்கர் சந்தைக்கு வந்துவிட்டது. முதலில் எலைட் வர்க்கத்திடமிருந்த
சினிமா, 1927 வாக்கில் மெல்ல எளிய மக்களிடம் வந்தது. முதலில் தியேட்டரின் வெளியே விற்று கஸ்டமரை பிடித்தார்கள். ஒரு பாக்கெட் ஐந்து சென்ட் என்பதால் அறிவுஜீவி டூ டாக்சிவாலா வரை வாங்கி புரையேறும்படி
தின்றார்கள். பின் தியேட்டர் லாபியில் விற்பனை களைகட்டியது.
இரண்டாம் உலகப்போரில் பாப்கார்ன் விற்பனைக்கு சக்சஸ் மீட் போடலாம்.
சோடா மற்றும் மிட்டாய் செய்ய சர்க்கரை தட்டுப்பாடு. அந்த கேப்பில் கட் அடித்து வென்ற பாப்கார்ன் இன்றும் நம் வாயைவிட்டு இறங்கவில்லை.
தொகுப்பு: பெத்தீதா கார்லோஸ்
நன்றி: முத்தாரம்