அறிவியல் பிட்ஸ்!
பிட்ஸ்!
ஜப்பானின் டோக்கியோவில் The Restaurant of
Order Mistakes திறக்கப்பட்டுள்ளது. வெய்ட்டர்கள்
அனைவரும் மறதி (டிமென்ஷியா) கொண்டவர்கள்
என்பதால், நீங்கள் கொடுக்கும் ஆர்டர் பிறருக்கும், மற்றவரின் ஆர்டர் உங்களுக்கும் வருவதுதான் இங்கு ஸ்பெஷல்.
மழைக்காடுகளிலும்
சிலவகை பென்குயின்கள் வாழ்கின்றன.
ஆர்க்டிக் என்ற
வார்த்தை க்ரீக் வார்த்தையான Arktos என்பதிலிருந்து வந்தது. இதற்கு, துருவக்கரடிகளின் நிலம் என்று அர்த்தம்.
ஜப்பானில் தத்தெடுக்கப்படுபவர்களில் 98 சதவிகிதத்தினரின்
வயது 20-30.
பகல் முழுக்க தூங்கி
இரவில் விழித்து ராக்கோழியாக திரிபவர்களுக்கு lychnobite என்று பெயர்.
பிட்ஸ்!
சீனாவிலுள்ள 85% மக்களின்
பின்னொட்டு பெயர்கள் ஒரேமாதிரியாகவே உள்ளது.
Trader Joe என்பவரின் கடையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சாம்பிள் சோதித்து
வாங்கும் வசதி உண்டு.
Johannese Gumpp என்ற ஓவியர் தன்னைத்தானே வரைந்த போர்ட்ரைட் ஓவியத்தின் ஸ்பெஷல், ஓவியம் வரைந்துகொண்டிருக்கும் கம்ப்பின் உருவம், அவருக்கு
எதிரிலுள்ள மூன்று கண்ணாடிகளிலும் மிகச்சரியான கோணத்தில் தெரியும்படி துல்லியமாக வரையப்பட்டிருக்கும்.
பண்பலை ரேடியோவில்
பாடும் பாடகர்களுக்கு சல்லிப்பைசாவைக் கூட கண்ணில் காட்டாத நாடுகள் அமெரிக்கா,சீனா,இரான்,வடகொரியா.
ஒருமுறை ரத்ததானம்
செய்யும்போது(one
Pint) உடலில் 650 கலோரி செலவாகிறது. இதன்மூலம் மூன்றுபேர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
பிட்ஸ்!
ரொமான்டிக் பறவைகள்
என்றால் அது கார்டினல்கள்தான். இணைசேர்ந்தபின் ஒன்றாக இரை தேடுவது,
பிரியாமல் உட்கார்ந்திருப்பது, கூவுவது,
ஒன்றுக்கொன்று உணவூட்டுவது என அழகு அள்ளும்.
தனக்கேற்படும்
துயரமான வேதனையை சிரித்துக்கொண்டே பொறுத்துக்கொள்வதற்கு Eccedentesiast என்று பெயர்.
இரண்டாம் பரோவா
ராமெசஸ் என்பவருக்கு
1984 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. மன்னரான
ராமெசஸ் இறந்து 3,197 ஆண்டுகள் ஆன பின், அவரது உடலை பதப்படுத்த பிரான்ஸ் கொண்டு செல்லவே பாஸ்போர்ட்.
எத்தியோப்பிய விமானம்
கடத்தப்பட்டு சுவிட்சர்லாந்து சென்றது. அதைக்காப்பாற்ற பிரஞ்சு/இத்தாலி போர்விமானங்கள்தான் வந்தன. ஏன்? ஸ்விட்சர்லாந்து போர்விமானங்கள் இரவுகளிலும், வீக் எண்ட்களிலும்
இயங்குவதில்லை.
1934 ஆம்
ஆண்டு ஹிட்லர் அதிபராக இருந்தபோது, அவரின் கட்டுப்பாட்டிலிருந்த
வருவாய்துறையால் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு அவர்மீது விதிக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்து சாதுரியமாக விதிவிலக்கு பெற்றார் ஹிட்லர்.
தொகுப்பு: கார்லோஸ் சமோசா, ஆலன் வர்கீஸ்
நன்றி: முத்தாரம்