துப்பாக்கிக்கு கட்டுப்பாடு!
பிழைக்குமா கரப்பான்பூச்சிகள்?
அகில உலக கேரக்டராக
சந்து பொந்து எங்கும் வாழும் உயிரியான கரப்பான்பூச்சி, மனிதர்களையும்
இயற்கையும் சமாளித்து இன்றும் அழியாமல் வாழ்ந்து வருகிறது. 3 கோடி ஆண்டுகளாக வாழும் உயிரி, அணு ஆயுதப்போரிலும் பிழைக்கும்
என நம்புகிறார்கள்.
கதிர்வீச்சை தாங்குவதில்
மனிதர்களை விட வலிமை கொண்டது கரப்பான். ஒரு மாதத்திற்கும் மேல் சாப்பிடாமல்
தாக்குப்பிடிக்கும் இதன் திறன், அணுஆயுதப்போரில் உதவும் என கணிக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். பரிணாம வளர்ச்சியின் வேகமும், விஷத்தையும் கதிர்வீச்சையும் எதிர்த்து தாங்கும் வலிமையும் கரப்பானுக்கு கவசமாக
உதவலாம். வண்டுகள், கரப்பான்பூச்சிகளை வைத்து
ஆராய்ச்சியாளர்கள் செய்த டெஸ்டில் மனிதர்களை கொல்லுமளவு பத்து மடங்கு கதிர்வீச்சு பயன்படுத்தியபோது,
வண்டுகள் கரப்பான்பூச்சியையும் தாண்டி தாக்குப்பிடித்து சாதித்தன.
4 ஆயிரம் வகை கரப்பான்பூச்சிகள் கோடிக்கணக்கில் உயிர்வாழ்வதால்,
அவற்றில் சில நியூக்ளியர் போரில் பிழைக்க வாய்ப்புண்டு.
கண்நோய்களை கண்டறியும்
கூகுள்!
கூகுள் ஆராய்ச்சியாளர்கள்
கண்களை ஆய்வு செய்து அதன் மூலம் இதய நோய்களை கண்டுபிடிக்கும் அல்காரிதத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின்
வயது, ரத்த அழுத்தம், புகைப்பிடிப்பவரா
இல்லையா ஆகிய விவரங்களை அறிவதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் விகிதத்தை கண்டுபிடிக்கிறார்கள்.
கூகுளின் புதிய
அல்காரிதம் மூலம் ரத்த டெஸ்ட் எடுக்காமல், கண்களை செக் செய்தாலே போதும்.
கூகுள் மற்றும் கூகுளின் வெரிலி எனும் மானிய உதவி திட்ட ஆராய்ச்சியாளர்கள்
இணைந்து 3 லட்சம் நோயாளிகளிடம் அல்காரிதத்தை சோதித்துள்ளனர்.
உடலின் ரத்தவோட்டத்தை கண்கள் பிரதிபலிப்பதால் அதன் மூலமே நோய்களை அறியமுடியும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
துப்பாக்கிக்கு
கட்டுப்பாடு!
துப்பாக்கி வன்முறை
என்பது அமெரிக்காவில் வாழ்க்கையை குலைத்துப்போடும் ஒன்றாக மாறியுள்ளது. எஃப்பிஐ
அறிக்கைப்படி 2014 ஆண்டில் மட்டும் துப்பாக்கியால் 33
ஆயிரத்து 594 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
விபத்துகளால் அங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை 200 க்கும் குறைவுதான். 2015 ஆம் ஆண்டில் மட்டும் துப்பாக்கியால்
காயமுற்றவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரம் எனில் இதில் பத்தாயிரம்
பேர் குழந்தைகள்.
1996 ஆம்
ஆண்டு அமெரிக்க அரசு, நோய்தடுப்பு அமைப்புகளுக்கு(CDC) துப்பாக்கி தாக்குதலுக்கு நஷ்டஈடு வழங்குவதை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
இதன் விளைவாக அரசுக்கு 2.6 மில்லியன் டாலர்கள்
மிச்சமானது. 1993-2016 வரையிலான துப்பாக்கி தாக்குதல் ஆராய்ச்சிகளுக்கான
பணத்தையும் 96% வெட்டியது தேசிய ரைஃபிள் சங்கத்தின் அசுர லாபி.
2014 ஆம் ஆண்டு 3 பில்லியன்களும் 2016 ஆம் ஆண்டு ஹிலாரிக்கு எதிராக 20 பில்லியன் டாலர்களும்
செலவிட்டு ட்ரம்பை கொண்டுவந்தனர். ட்ரம்புக்கு ஆதரவாக பத்து பில்லியன்
செலவிட்ட அமைப்புக்கு எதிராக ட்ரம்ப் என்ன செய்ய முடியும்? மக்கள்
போராட்டமே இதற்கு ஒரே தீர்வு.
தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்