கைவிடாதே காதலா!
கைவிடாதே காதலா!
பிரேக்அப் ஆனால்
உடனே இன்ஸ்டன்ட்டாக அடுத்த ஜோடியை சேர்ந்து வாட்சப்பில் கடலை வறுத்து இன்ஸ்டாகிராமில்
செல்ஃபீ போட்டு கலாய்த்து திரியும் காலத்தில் இப்படியொரு பெண்ணா உலகையே மிரட்டியிருக்கிறது
அம்மணியின் டான்ஸ் வைபவம்!.
குர்கானின் பட்டாடியிலுள்ள
ஹால்மாண்டி பகுதியில் டிஜே குழுவோடு புல் சரக்கில் வந்த பெண், நடுரோட்டில்
நின்றபடி டான்ஸ் ஆடத்தொடங்கினார். ஊரே கூடிநின்று வேடிக்கை பார்க்க
எதைப் பற்றியும் லஜ்ஜையேயின்றி இந்தி காதல் சோகப்பாடல்களுக்கு இடுப்பை வளைத்து ஆடினார்
இளம்பெண். மாரியம்மன் அருளால் ஆடினாரா? இல்லை. தன் காதலர் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றுதான்
இந்த டான்ஸ் தவம். காதலர் ஓகே சொன்னாரோ இல்லையோ அம்மணியின் டான்ஸ்
வீடியோ அமர்க்கள ஹிட்டாகிவிட்டது. மாமன் மேல அம்புட்டு வெறியா?
பணக்காரர்களை வெளியேற்றும்
இந்தியா!
உலகில் சீனாவுக்கு
அடுத்துதான் இந்தியா இந்த விஷயத்திலும் இடம்பிடித்திருக்கிறது. எதில்?
பணக்காரர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதில்தான். கடந்தாண்டில் மட்டும் சீனாவில் 10 ஆயிரம் ரிச்மேன்கள்
நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக நியூவேர்ல்ட் வெல்த் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 7 ஆயிரம் பிசினஸ் புள்ளிகள் வெளிநாட்டுக்கு
இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த இந்தியர்கள்
அமெரிக்கா,
அரபுநாடுகள், கனடா, ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து என கண்டம் விட்டு கண்டம் சொத்துக்களோடு ஜம்ப் ஆகியுள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல துருக்கி(1000), இங்கிலாந்து
மற்றும் பிரான்ஸ்(4000), ரஷ்யா(3000) என
பல பசை பார்ட்டிகள் தேசத்தை மாற்றிக்கொண்டுவிட்டனர். ஆஸ்திரேலியா
ஒப்பீட்டளவில் 10 ஆயிரம் பசை பார்ட்டிகளை ஈர்த்து கடந்த பத்து
ஆண்டு சொத்து மதிப்பு 20 சதவிகிதம் உயர்த்தி 83% ஆக மாற்றிக்கொண்டு விட்டது. இதில் ட்ரம்ப்பின் கழுகு
தேசமான அமெரிக்காவுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.
பாலுக்கு ஏடிஎம்!
பணம் எடுக்க ஏடிஎம்
போன மக்கள் இனி பால் வாங்கவும் கூட ஏடிஎம் போகலாம். இதில் என்ன தப்பு என்கிறார்
பால் ஏடிஎம் மெஷினை கண்டுபிடித்துள்ள குஜராத் விவசாயி நீலேஷ் குஷார்.
குஜராத்தின் கிர்-சோம்நாத்
மாவட்டத்தைச் சேர்ந்த நீலேஷ் குஷார், முதலில் ரூ.20, ரூ.50,ரூ.100 ஆகிய ரூபாய்களை பெற்றுக்கொண்டு
பால் வழங்கும்படி மெஷினை டிசைன் செய்தார். லட்சியம்? பாலை விவசாயி தன் இஷ்டப்படி விலை வைத்து விற்கவேண்டும் என்பதே.
"விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இருக்க கூடாது
என்றுதான் பால் ஏடிஎம்மை உருவாக்கினேன்" என்பவர்,
முப்பது மெஷின்களை மகாராஷ்டிரா,சட்டீஸ்கர்,
தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு விற்றுள்ளார். பதிவு
செய்தவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை பதிவு செய்தால் பால் பெறும் முறையில்
ஏடிஎம்மை டெவலப் செய்துள்ள நீலேஷ் குஷார், பதினொன்றாம் வகுப்புவரை
படித்து, ஆர்வத்தால் எந்திரங்களை இயக்கி பால் ஏடிஎம்மை உருவாக்கியுள்ளார்.
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்