மனோஜ் பார்க்கவா ஜெயித்தது எப்படி?



Related image





களவு போகும் ஆயில்!

டொனால்ட் ட்ரம்ப் டவீட்டிலேயை இதுதான் உண்மை. இரான் பற்றி "தங்கள் நாட்டின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து மக்கள் கவனமாக இருக்கவேண்டும்" என்று ட்ரம்ப் கூறியதை அடியொற்றி துணை அதிபர் மைக் பென்ஸ், இதை வழிமொழிந்துள்ளார்.


எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதக்குழுக்கள் எண்ணெய்யை விற்று உயிர்வாழ்கின்றன. மக்களின் சொத்தான இந்த எண்ணெய் விற்ற பணம் ஊழல், தீவிரவாதம், அடக்குமுறை என அனைத்துக்கும் ஆயுதமாகிறது. சிரியா, ஏமன், லிபியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதாரமே எண்ணெய் வளத்தில்தான் நடைபெறுகிறது. எண்ணெய் திருட்டும் இங்கு அதிகம். ஒரு அமெரிக்க குடும்பம் ஓராண்டுக்கு 250 டாலர்களுக்கு மேல் எரிபொருளுக்காக செலவழிக்கின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளிடமிருந்து நாடுகள் கச்சா எண்ணெய் பெற்றுவருகின்றன. அண்மையில் பிரேசில் இதுபோன்ற விதிமீறலாக எரிபொருளை வாங்குவதை தடை செய்து சட்டமியற்றி உள்ளது. பிறநாடுகளும் பின்பற்றவேண்டிய சட்டம் இது.

2
சூப்பர் கேம்!

Harry Potter: Wizards Unite
ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் அதிரடி கிளப்பும் விளையாட்டு இது. ஜே.கே.ரௌலிங்கின் விஸார்ட்டிங் வேர்ல்ட் நூலை தழுவி வெளியாகியுள்ளது. "ரௌலிங்கின் கதாபாத்திரங்கள் உங்கள் வாழ்க்கையோடும் பயணிப்பார்கள்" என்கிறார் நியான்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹடாட்.

Red Dead Redemption 2
2010 ஆண்டு ரிலீசான கேமின் இரண்டாம்பாகம் இது. மார்வெல் ஸ்டூடியோ பட்ஜெட்டில் உருவாகும் கேம், டைனமிக் முறையில் கொண்டாடும் வகையில் ராக்ஸ்டார் நிறுவனத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள்.

The Last of Us Part 2

பேரழிவு காலகட்டத்திற்கு பிறகான சர்வைவல் போராட்டமே இந்த கேமின் கரு. 2013 எடிஷனில் கதை, கேரக்டர்கள் என பலராலும் பாராட்டப்பட விளையாட்டின் அடுத்த பாகம் இது. முதல் பாகத்தின் ஆக்‌ஷன் ஹரி படமாய் இதிலும் தீப்பிடிக்கும் என டீசர் சொல்கிறது.

3

நல்வாழ்வு இந்தியர்!

இந்தியாவின் லக்னோவில் 1953 ஆம் ஆண்டு பிறந்த மனோஜ் பார்க்கவா, தன் சொத்துக்களில் 99% பகுதியை மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிக்காக செலவழித்து வருகிறார். 5-hour Energy என்ற குளிர்பானத்தை 2003 தொடங்கி மனோஜ், இதன்மூலம் 2012 ஆம் ஆண்டு சம்பாதித்த தொகை, 1 பில்லியன் டாலர்கள்.

1967 ஆம் ஆண்டு குடும்பத்தோடு அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்த பார்க்கவா, கணிதத்தை சிறப்பாக கற்றார். பிரின்ஸ்டன் கல்லூரியில் ஓராண்டே படித்தவர் இந்தியா திரும்பி பனிரெண்டு ஆண்டுகள் பல்வேறு கட்டுமான வேலைகள் செய்து பயணித்து அலைந்து திரிந்தார். பின் அமெரிக்கா சென்று லிவிங் எசென்சியல் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டார். ஹேன்ஸ் பவுண்டேஷன்(2009) என்ற அமைப்பு மூலம் குடிநீர், மின்சாரம், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து கிராமப்புற மக்களுக்கு உதவ மெனக்கெட்டு வருகிறார்.

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்




பிரபலமான இடுகைகள்