விநோதம் பிட்ஸ்!





Related image

பிட்ஸ்!


சில்லறை டார்ச்சர்!

சீனாவின் புடியன் நகரிலுள பிஎம்டபிள்யூ டீலர் ஆபீஸ் மாலை திடீரென மூடப்பட்டுவிட்டது பலருக்கும் ஷாக். காரணம் சீனரின் கார் வாங்கும் ஆசைதான். காரில் விலையான 11 ஆயிரம் டாலர்களை பத்து பெட்டிகளில் சில்லறையாக கொண்டுவந்துவிட்டார். கடை ஊழியர்கள் ஷட்டரை இறக்கி, கைகளில் ரத்தம் கசிய சில்லறைகளை எண்ணியிருக்கிறார்கள்.

அதிபர் இல்லாத கரன்சி!

பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க், புதிதாக அச்சிட்ட 100 பெசோ கரன்சி நோட்டுக்களை திரும்ப பெற உள்ளது. ஏன்? அதிபர் மானுவேல் ரோக்ஸாஸின் முகம் நோட்டின் பிரிண்டிங்கில் மிஸ்ஸானதே காரணம். இதனை இணையத்தில் எர்லா அன்னே என்ற பெண் பதிவிட்டு பிலிப்பைன்ஸ் அரசின் மானத்தை வாங்கிவிட்டார்.

காக்பிட்டில் பறவை!

அமெரிக்காவின் மிச்சிகனிலிருந்து கிளம்பிய ஜார்ஜியா விமானம் வேகமாக கீழிறங்கும் சூழ்நிலை. பாமா?, கடத்தலா? ம்ஹூம் காக்பிட்டில் பறவை என்ட்ரியானதுதான் காரணம். மீண்டும் டெட்ராய்டில் கீழிறக்கப்பட்டு உள்நுழைந்த ஹம்மிங்பேர்ட்டை விரட்டி விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்திருக்கிறார்கள்.

தடைக்கு எதிராக தீவு!

நியூசிலாந்தின் தைருவாவைச் சேர்ந்த குடிமகன்கள் அரசின் புத்தாண்டு மதுதடைக்கு எதிராக என்ன செய்தார்கள் தெரியுமா? கடலில் மணல்திட்டை கிரியேட்டிவாக உருவாக்கி ஏழு நண்பர்களும் உற்சாக பானம் அருந்தி அரசை வம்புக்கு இழுத்துள்ளனர். மது அருந்தி தகராறு ஏற்படுவதால்தான் தடை அமுலானது.



மனித அதிசயம்!

துருக்கி விவசாயி சுல்தான் கோஸன், இந்திய நடிகை ஜோதி அம்ஜே ஆகிய இருவரும் எகிப்து பிரமிட்டை சுற்றிப்பார்த்த சிறப்பு விசிட்டர்கள். சுல்தானின் உயரம் 8அடி 3 அங்குலம் என்றால், ஜோதியின் உயரம் 2 அடிதான். நான்கு நாட்கள் விசிட்டில் கெய்ரோ டவர் உள்ளிட்ட இடங்களையும் சுற்றிப்பார்க்க போகிறார்கள்.  

கங்காரு தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ்லாந்தில் ரெபெக்கா தன் நண்பருடன் சைக்கிளில் ஜாலி ரைடு சென்றார். அப்போது சாலை ஒரே ஜம்பாக தாண்டிய கங்காரு நேராக ரெபெக்காவின் மீது விழுந்து அவரை கீழே சாய்த்தது. விளைவு?முழங்கால் மற்றும் தோல்பட்டையில் தையல்களோடு ஆஸ்பத்திரியில் இருக்கிறார் ரெபெக்கா. இந்த கங்காரு அட்டாக் வீடியோ இணையத்தில் சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

பயிர்காவலன்!

பாங்காக்கில் அறுவடையான பயிர்களை ஏற்றியபடி, ட்ரக் ஒன்று சென்றது. அதன் பின்னால் சென்ற பைக் பயணி, அதன் மேலே பார்த்தபோதுதான் ஆச்சரியம், பயிர்களுக்கு செக்யூரிட்டியாக நாய் ஒன்றும் மேலே நின்று பயணித்தது. "வண்டியில் பயிர்களுக்கு மேலே நின்ற நாய், அப்படியே அதன் மீது சர்ஃபிங் செய்வது போலிருந்தது" என்கிற பயணியின் வீடியோவுக்கு லைக்குகள் அநேகம்.

பாத்ரூமில் கல்யாணம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரையன் மற்றும் மரியாசூல்ஸ் நகர கோர்ட்ஹவுசுக்கு திருமணம் செய்ய வந்தனர். ஆனால் பிரையனின் அம்மாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்க, பாசக்காரப்பிள்ளை பிரையனின் சிந்தனைப்படி அவருக்கு சிகிச்சையளித்த பெண்கள் பாத்ரூமிலேயே அவர் முன்னிலையில் தம்பதிகள் மோதிரம் மாற்றி மிராக்கிள் கல்யாணம் செய்து ஷெரீப்பையே மிரள வைத்துள்ளனர்.

 பிட்ஸ்!

குட்மார்னிங் ஐரிஷ்!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மிச்செல் மையர்ஸூக்கு விநோத பிரச்னை. ஏழு ஆண்டுகளாக படுக்கையிலிருந்து தலைவலியோடு எழுபவர்,   ஐரிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசிவருகிறார். 2015 ஆம் ஆண்டு வலது கண்ணும், இடப்புற உடலும் செயலிழந்து போய் பின்னர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் இயங்கத்தொடங்கியதிலிருந்து இப்பிரச்னை உள்ளதாம்.

ஆந்தை அட்டாக்!

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஜாக்கிங், சைக்கிளிங் செல்பவர்களை ஆந்தைகள் வானிலிருந்து தாக்க தொடங்கியுள்ளன. சாவாசென் பகுதி போலீசுக்கு இரண்டு புகார்கள் வந்துவிட்டன. ஜாக்கிங் மற்றும் சைக்கிளில் செல்பவர்களுக்கு போலீஸ் டேக் டைவர்ஷன் போர்டு வைத்து ஜிகுஜிகி கலர் ஹெல்மெட் வேண்டாம் என வார்னிங் கொடுத்துள்ளனர்.

'கமா'வால் பணம் போச்சு!

அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்திலுள்ள பால்பண்ணைக்கும் ஓவர்டைம் பார்த்த தொழிலாளர்களுக்கும் 2014 ஆண்டிலிருந்து வழக்கு பிணக்கு. சட்டவிதியில் ஓரிடத்தில் கமா மிஸ் ஆனதால், தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை கம்பெனி தரும் நிர்பந்தம் உருவாகிவிட்டது. நான்கு ஆண்டுகளாக கம்பெனி தரவேண்டிய செட்டில்மென்ட் தொகை இது.

வறுவல் ரெக்கார்ட்!

இங்கிலாந்தின் பிர்மிங்காமிலுள்ள பிரிட்டிஷ் ரிசார்ட்டில் 61.4 பவுண்டு எடையுள்ள மீனை வறுத்து கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2012 ஆம் ஆண்டில் லண்டனில் 42 பவுண்டு எடையில் மீன் வறுக்கப்பட்டதுதான் சாதனை.

 பிட்ஸ்!

கரும்புலாரிக்கு ரெட் சிக்னல்!

தாய்லாந்தில் சாசோன்சாவோ சாலையில் சென்ற கரும்புலாரிகள் திடீரென நின்றன. ஸ்டாப் சொன்னது ஃபாரஸ்டிலிருந்து வந்த பெரிய யானை. தேவையான கரும்புகளை உருவிய பின்தான் லாரிகளுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. பனிரெண்டு லாரிகளை கேன்டீனாக்கி சாப்பிடும் கஜராஜா வீடியோ இணையத்தில் வைல்ட் ஹிட்.

எலும்புக்கூடு மிஸ்ஸிங்!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டிலுள்ள ரண்டல் மாலில் திருட்டு போயுள்ளது. பணமா? நகையா? ம்ஹூம் பைபர்கிளாசில் செய்த எலும்புக்கூட்டை காணோம். என்கொயரியில் இறங்கிய போலீசார் செக்யூரிட்டி கேமரா வீடியோவை ஃபேஸ்புக்கில் போட்டு திருட்டு கேங்கை உலகத்தையே அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர்.

ஹீரோ பசு!

போலந்து நாட்டைச் சேர்ந்த பசு உலகப்புகழ்பெற்றுவிட்டது. எப்படி? இறைச்சிக்கூடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கறிப்பண்ணை ஓனரை உதைத்து வேனிலிருந்து குதித்து தப்பியதால். தற்போது செக் நாட்டின் எல்லையிலுள்ள நைஸா ஏரி அருகே வாழ்வதாக தகவல். விலங்கு காப்பகம் ஒன்றும் பசுவை பாதுகாப்பதாக கூறியுள்ளது.

ராங்ரூட் கொள்ளை!

சீனாவின் ஷாங்காயில் நடந்த கொள்ளை வீடியோதான் இணையத்தில் டாக் ஆப் தி காமெடி. கடையை உடைக்க இரு கொள்ளையர்கள் ட்ரை செய்தனர். ஒருவர் கண்ணாடியை உடைக்க வீசிய கல், பும்ராவின் பவுன்சராக மாறி இரண்டாவது கொள்ளையரை முகத்தில் மோத அப்புறம் என்ன? திருடருக்கு தண்ணீர் தெளித்து மயக்கம் போக்கியிருக்கிறது போலீஸ்.

தொகுப்பும் ஆக்கமும்: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம் 












பிரபலமான இடுகைகள்