அழகு பரிசோதனைகள்!
அழகு டிரெண்ட்ஸ்!
CORSETS
உடுக்கை சைசில்
துடியிடை கொண்ட பெண்களை இன்றும் கவிஞர்கள் கனவுகொண்டு பாடினாலும் அப்படியொரு ஷேப் கொண்ட
பெண்கள் இன்று உலகில் மிக அரிது. ஆனால் 1800 களில் அதற்காக
மார்பு, இடுப்பு இரண்டையும குறிப்பிட்ட வடிவில்(14 இன்ச் இடுப்பு) கச்சிதமாக காட்ட உருவானதே கார்செட்.
சிலர் இதனை மிகவும் இறுக்கமாக அணிய தசையமைப்பு சிதைவு, சீரற்ற மார்பு எலும்புகள், முதுகெலும்பு சீரற்றவளர்ச்சி
என அடுக்கடுக்காக பிரச்னைகள் வெடித்தன.
Tape worm diet
1900 களில்
பெண்கள் டயட்டிற்காக மாத்திரைகளில் நாடாபுழு முட்டைகளை புதைத்து தின்கிறார்கள் என தினசரிகளில்
செய்தி வெளியாகி பீதி ஏற்பட்டது. இவை வயிற்றுக்குள் சென்று வளர்ந்து
உணவின் ஊட்டச்சத்துக்களை தானே தத்து எடுக்கும்போது, குறிப்பிட்ட
பெண்கள் ரத்தசோகை பிரச்னை ஏற்பட்டு பென்சில் ஷேப்புக்கு மாறுவார்கள். 1912 இல் நாடாப்புழு பருமனைக்குறைக்காது என வாஷிங்டன் போஸ்ட் இதழில் அலர்ட் கட்டுரையே
வெளியானது.
RADIOACTIVE FACE CREAM
1930 ஆம்
ஆண்டில் டாக்டர் ஆல்ஃபிரட் க்யூரி தோரியம் குளோரைடு, ரேடியம்
புரோமைடு கெமிக்கல்களைக் கொண்ட தோரேடியா என்ற அழகுசாதன பிராண்டை உருவாக்கினார்.
முகத்தின் செல்களுக்கு உயிர்கொடுங்கள் என்று சுலோகன் சொல்லி கதிர்வீச்சு
க்ரீமை விளம்பரப் படுத்தினார் டாக்டர் ஆல்ஃபிரட்.
தொகுப்பு: கேத்தரின் ஈஸ்ட், நோவா
நன்றி:முத்தாரம்