நீரின்றி மனிதன்!



Image result for water





பைத்திய ருசி!

மேதைகளுக்கும் பைத்தியத்திற்கும் சம்பந்தமுண்டா என்ற கேள்விக்கு சாட்சிகள் உள்ளன. தீர்க்கமான பதில்கள் இல்லை. காதலிக்கு தன் காதை அறுத்து பரிசளித்த ஓவியர் வின்சென்ட் வான்கா, தனது படங்களையே பல்வேறு கோணங்களில் ஓவியங்களாக வரைந்து தள்ளிய ப்ரீடோ காலோ என தனது துறையில் உச்சம் தொட்டவர்கள் பைத்தியத்தின் ருசியை சுவைத்தவர்களே.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 7 லட்சம் பேர்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக உளவியல் மருத்துவர் கே ரெட்ஃபீல்டு ஜாமிசன் ஆய்வு செய்தார். இம்மருத்துவரும் பைபோலார் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டு மீண்டவரே. "பதினாறு வயதிலுள்ள மனநிலை பின்னர் மாறி, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது" என்கிறார் ஜாமிசன். பத்தாண்டுகளுக்கு பிறகு செய்த ஆய்வின் முடிவில் இம்முடிவை தெரிவித்தவர், பைபோலார் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கிரியேட்டிவிட்டியில் உச்சம் தொட்டவர்களாகவும் உள்ளனர் என 30க்கு மேற்பட்ட ஆய்வுமுடிவுகளை சுட்டிக்காட்டுகிறார் ஜாமிசன். "மனஅழுத்த பிரச்னையிலிருந்து ஒருவர் வெளியே வந்தாலே மூளை சிறப்பாக செயல்படும்" என சிம்பிள் தீர்வு சொல்கிறார் நரம்பியல் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ஃபாலன்.

2

நீரிழிவை அறியும் லென்ஸ்!

தென்கொரியாவிலுள்ள உல்சான் தேசிய அறிவியல் தொழில்நுட்பகழகத்தில் உடலின் குளுக்கோஸ் அளவை அறியும் கான்டாக்ட் லென்ஸை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

நீரிழிவால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும் பிரச்னை, உடலில் அன்லிமிடெட்டாக ஏறும் குளுக்கோஸ் அளவுதான். தற்போது இதனைக் கட்டுப்பாட்டில் வைக்க இன்சுலின் உதவுகிறது. ரத்த சாம்பிள்களை எடுத்து டெஸ்ட் செய்தால் மட்டுமே உடலின் சர்க்கரையை துல்லியமாக அறியமுடியும். கண்ணை உறுத்தாக மெலிதான பாலிமரில் லென்ஸை உருவாக்கியுள்ளனர். உடலில் குளுக்கோஸ் அதிகரித்தால், எரியும் எல்இடி விளக்கு அணைந்து விடும்.  கிராபீன் சென்சார்,ஆன்டென்னா,ரெக்டிஃபையர் ஆகியவை இணைந்துள்ளன. இதனை சாதாரண லென்ஸை போலவே எளிதாக கண்களில் பொருத்தவும் நீக்கவும் முடியும்.


3

கார்பன் சாண்ட்விட்ச்!

கார்பன் வாயுக்களை உருவாக்குவதில் சாண்ட்விட்ச் உணவு பெரும்பங்கு வகிப்பதாக மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உலகிலுள்ள புகழ்பெற்ற 40 சாண்ட்விட்சுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதன் பகுதிப்பொருட்களின் உற்பத்தி  முதல் சாண்ட்விட்ச்சாக மாறுவது வரையில் கார்பன் வாயுக்களை(1441 கிராம்) அதிகம் வெளியேற்றுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் சமைத்த அல்லது வறுத்த பன்றி இறைச்சி, சீஸ்,இறால் ஆகியவையும் அடங்கும். பனிரெண்டு கி.மீ தூரம் காரில் பயணித்தால் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கு சமம். இங்கிலாந்தில் மட்டும் ஓராண்டிற்கு 11.5 பில்லியன் சாண்ட்விட்ச்சுகள்(8 பில்லியன் டாலர்கள் செலவு) விற்பனையாகின்றன. சாண்ட்விட்சுக்கான விவசாயப் பொருட்கள் விளைப்பதிலிருந்து உணவாக தயாராகும்வரை சூழலில் கார்பன் சதவிகிதம் 67% குறைக்கமுடியும். மேலும் உலகெங்கும் வீணாகும் சாண்ட்விட்சுகளின் அளவு 2 ஆயிரம் டன்களை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனப்படுத்தியுள்ளனர்.


4

நீரின்றி மனிதன்!

வெப்பமயமாதலால் ஆறு,குளம்,குட்டை,கால்வாய் என அனைத்து நீர்ப்பரப்பும் மெல்ல சுருங்கி வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் இச்சூழ்நிலையில் எத்தனை நாட்கள் நீரின்றி தாக்குபிடிக்க முடியும்?

நீரின்றி ஏழு நாட்கள் தாக்குபிடிக்கலாம் என்பதே பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் பதில். துல்லிய தரவுகள் இதில் கிடைக்கவில்லை. ஒருவர் உயிர்பிழைப்பு அவரின் ஆரோக்கிய உடலமைப்பு, தட்பவெப்பநிலை ஆகியவையும் இதில் முக்கிய அம்சங்கள் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த மாயோ கிளினிக் ஆராய்ச்சி அமைப்பு. "மிக வெப்பமான சூழலில் ஒருவரின் உடல் 1.5 லிட்டர் நீரை வியர்வையாக வெளியேற்றுகிறது" என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ராண்டல் பேக்கர். சிறுவன், சூடான கார் அல்லது தடகளப்பயிற்சியில் இருந்தால் வெப்பமான சூழ்நிலையில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சில மணி நேரத்தில் நிகழக்கூடும். காய்ச்சல் நோயாளிகளுக்கு உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் வெளிப்புற வெப்பம் காரணமாக, டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் குடிக்க தோன்றாமல் பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்குவார்கள் என்கிறார் பேனர் தண்டர்பேர்ட் மருத்துவ மையத்தின் சிகிச்சை மருத்துவரான கர்ட் டிக்‌ஸன். தன் உடல்எடையில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டால் அபாயம் என வரையறுக்கிறது இங்கிலாந்தின் தேசிய ஆரோக்கிய சேவை அமைப்பு(2009). ஒருமணி நேரத்திற்கு 1.5 லிட்டர் என்பது தோராய கணக்கு.

தொகுப்பு: கர்னல் தெரோஸ், லெகுஸ்லியா
நன்றி: முத்தாரம்