"இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம்"
முத்தாரம் அறிவியல் இதழில் புதிதாக வெளியாகும் பகுதி இது. குட்டி பேட்டியாக அந்தந்த வாரத்தில் வெளியாகும் விஷயங்களின் சாட்சியாக உங்களின் மனதை பாதித்த, கவனத்தை கவர்ந்தவை இதில் இடம்பெறும்.
முத்தாரம் Mini
ஆப்கானிஸ்தானில் மக்கள் மீது எதற்காக தாக்குதல் நடத்துகிறீர்கள்?
நாங்கள்
ராணுவத்தை மட்டுமே தாக்குகிறோம்; மக்களையல்ல. அயல்நாட்டினர் எங்களை வெடிகுண்டு வைத்து கொல்கின்றனர். எங்களது அட்டாக்கில் மக்கள் இறந்தாலும் எண்ணிக்கையில் அது மிக சொற்பம்.
ஆப்கானிஸ்தான் மேல் அக்கறை இருந்தால் அமைதி நடவடிக்கையில் இறங்கலாமே?
எங்கள்
நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை நாங்கள் எதிர்க்கிறோம். அதிகாரமற்ற அமைதி கவுன்சில்,
ஆப்கன் அரசு ஆகியவற்றுடன் பேச நாங்கள் விரும்பவில்லை. அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டும் கவர்னர் அட்டா முகமது நூரை பதவி விலக்க முடியாமல் அரசு இருக்கிறது.
பாகிஸ்தானை நண்பராக பார்க்கிறீர்களா?
சோவியத்
முற்றுகையில் ஆயிரக்கணக்கானோர் அகதியாக பாகிஸ்தான் சென்றனர்.
பாகிஸ்தான் அமெரிக்கா, ஆப்கன் அரசுடன் இணைந்துள்ளது. ஆனால் அந்நாடு இயங்குவதற்கான கட்டளையை அமெரிக்காவிடமிருந்து பெறவில்லை.
இந்தியா
பற்றி தாலிபான் என்ன நினைக்கிறது?
அந்நியரற்ற ஆப்கனை நாங்கள் ஓருநாள் ஆளுவோம் என்பது உறுதி. வரலாறுரீதியாக இந்தியாவுடன் ஆப்கனுக்கு நல்ல புரிதலுண்டு. ஆப்கன் மக்களும்,
தாலிபனும் அனைத்து நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறது.