நாம் சாப்பிடுவது உணவா? வேதிப்பொருட்களா?



Image result for andrew kimbrell interview 2017






பசுமை பேச்சாளர்கள் 32
ஆண்ட்ரூ கிம்ப்ரெல்
.அன்பரசு

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ கிம்ப்ரெல் நியூயார்க்கில் இசை ஆசிரியராக இருந்து பின் தீவிர சூழலியலாளராக மாறியவர். உணவு பாதுகாப்பிற்கான அமைப்பின் செயலாளராக ஜிஎம் உணவுகளை லேபிளில் குறிப்பிட போராடிய வழக்குரைஞர்,விழிப்புணர்வு பேச்சாளர்.
"உணவுகளை பாக்கெட்டில் இயற்கையா, ஜிம் உணவா என்று வெளியிட வைத்துவிட்டால் மக்களை திரட்டி உணவை வாங்கவேண்டாம் என்று கூறிவிட முடியும்" தில் பேட்டி கொடுத்த போராட்ட ரத்தம் ஆண்ட்ரூ கிம்ப்ரெல்லுடையது. EPA வுக்கு எதிராக வெப்பமயமாதல் வழக்குகளில் ஈடுபட்டவர். மேலும் மரபணுமாற்ற பயிர்களின் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தியதில் ஆண்ட்ரூவின் பங்கு தவிர்க்கமுடியாத ஒன்று. நியூயார்க் டைம்ஸ், ஹார்பர்ஸ்,யுஎஸ்ஏ டுடே, ஹஃபிங்டன் போஸ்ட் ஆகிய இதழ்களில் சூழல் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். அதோடு Fatal Harvest, The Tragedy of Industrial Agriculture ,Your Right to Know: Genetic Engineering and the Secret Changes in Your Food  ஆகிய முக்கிய சூழல் நூல்களை எழுதிய ஆசிரியரும் இவர்தான்.


Image result for Fatal Harvest,



உளவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளிலும் முழுமையாக ஈடுபட்டு செயலாற்றும் ஆண்ட்ரூ, இகோ ஃபார்ம், கூகுள் ஆதர் டாக்ஸ் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்று பள்ளி, கல்லூரிகள் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார்"The Future of Food," "FRESH,", "Life Running out of Control."   வ ஆகிய டாகுமென்டரிகளையும் தயாரித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக உணவுத்துறையை தொழில்மயமாக்கும் முயற்சிகளை Center for Food Safety (CFS,1997) அமைப்பு தடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறது

"வேதிப்பொருட்கள் என்பதை உணவு என்பதோடு மட்டுமல்ல நம் வாழ்விலிருந்தே தள்ளி வைப்பதே எங்கள் நோக்கம்..எங்களிடம் உள்ள அனைத்து ஆற்றலையும் இயற்கை உணவு லட்சியத்தை அடைய பயன்படுத்துகிறோம்" என தன் செயல்பாடுகளை விவரிக்கிறார் ஆண்ட்ரூ கிம்ப்ரெல். Monsanto,Dufont,Basaf,Baer,Syngenta ஆகிய நிறுவனங்களின் விதைகளை விதைத்தால் அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளையும் அபரிதமாக பயன்படுத்தும் தேவை உண்டு என சுட்டிக்காட்டுகிறார் ஆண்ட்ரூ

தொகுப்பு: ராஜ, பிரமோத் மாத்தன்
நன்றி: முத்தாரம்