தீர்க்காயுஷ்மான் பவ!


Image result for livelong better



தீர்க்காயுஷ்மான் பவ! - .அன்பரசு


சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு மரணபயம் பிற உயிரினங்களை விட சற்றே அதிகம்தான். இன்று உலகளவில் சராசரி வாழ்நாள் 71 ஆண்டுகள். சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் சதமடித்து அவுட்டாகிறார்கள். உலிசஸ் எஸ் கிராண்ட் வாழ்ந்தபோது பிறந்த பிரெஞ்ச் பெண்மணி ஜீன் கால்மன்ட் 122 ஆண்டுகள் வாழ்ந்து கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருக்கும்போது காலமாகி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

1900 ஆம் ஆண்டில் வாழ்நாள் 47 ஆக இருந்தது. இன்று அமெரிக்காவில் உலகின் தோராய சராசரி வாழ்நாளை விட அதிகமாக 79 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக வாழ என்ன செய்யலாம்? தடுப்பூசிகள், ஆன்டிபயாடிக்குகள், டயட் உணவு, ஆன்டிசெப்டிக் மருந்துகள் என மக்கள் அலைபாய்கின்றனர். முகம், உடல் ஆகியவற்றின் வயதாகும் தன்மையை குறைக்க உதவும் சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலர்கள். அதிகநாட்கள் உயிர்வாழும் உயிரிகளைப் பற்றித் தெரிந்தால்தானே நம்மை அந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்?

red sea urchin

இருநூறு ஆண்டுகள் வாழும் உயிரி. நீண்டநாட்கள் தன் ஆயுளைப் பராமரிக்கும் வகையில் டிஎன்ஏவின் டெலோமெர்ஸ் பகுதியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

Quahog clam

இரண்டு நூற்றாண்டுகள் வாழும் சிப்பி வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. மிங் என பெயரிடப்பட்ட சிப்பி, 500 ஆண்டுகள் வாழ்ந்தது. சிப்பி இருந்த கடல், சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து சிப்பியின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

Jellyfish

ஆழ்கடலில் கலர் கலராக வாழும் ஜெல்லி மீன்கள் 5 கோடி ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. 1796 ஆம் ஆண்டிலிருந்த இந்த மீன்களுக்கு ஜெல்லி என்ற பெயர் புழங்கி வருகிறது. அதிகபட்ச வயது என்னவென்று தெரிய ஜெல்லி மீன்களில் பெரும்பாலனவற்றுக்கு செரிமான, சுவாச உறுப்புகள் கிடையாது.

Giant Tortoise

மெதுவான வளர்சிதை மாற்றத்தின் விளைவாக பெரிய ஆமைகள் மிக மெதுவாக வயது முதிர்கின்றன. நூறு ஆண்டுகளைத் தாண்டி வாழும் லோன்சம் ஜார்ஜ் என்ற ஆமை இதற்கு உதாரணம். கலாபகோஸ் பின்டா தீவிலுள்ள பிற ஆமைகளின் வயதும் அதிகம். இதைப்போலவே க்ரீன்லாந்தில் வாழும் சுறாக்களின் வயதும் 272 ஆண்டுகள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்