டாக்டர் பென்ஃபீல்ட் செய்த மருத்துவ சாதனை!


Related image



அதிசய டாக்டர் பென்ஃபீல்ட்!

முன்பு ஒருவருக்கு திடீரென காக்கை வலிப்பு எதனால் ஏற்படுகிறது என அறிவியலாளர்களுக்கே  புரியவில்லை. சுய இன்பம் டூ பாகமதி பேய்வரை யூகங்கள் அதிரிபுதிரியாக கிளம்பின.

1930 ஆண்டு மூளை அறுவை சிகிச்சை நிபுணரான பென்ஃபீல்ட், ஒருவர் சுயநினைவுடன் இருக்கும்போதே அவரின் மூளைத்திசுக்களில் மின்சாரம் பாய்ச்சி, தேவையற்ற பகுதிகளை வெட்டியெறிந்து வலிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள ஸ்போக்கனே எனுமிடத்தில் 1891 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பிறந்த கனடா- அமெரிக்கரான வைல்டர் பென்ஃபீல்ட், வலிப்பு நோய் குறித்த கற்பனைகளை  உடைத்தெறிந்தவர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மூளையின் திசுக்களை அகற்றுவதன் மூலம் காக்கை வலிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என நம்பினார் பென்ஃபீல்ட். அனைத்து வலிப்புநோய்களுக்கும் இது தீர்வல்ல என்றாலும் நோயாளிகளுக்கு பெரும் பயனளித்த முறை இது. வலிப்பு நோய்க்கு முன்பாக ஒருவர் உணரும் வாசனை, சுவை, கருத்து ஆகியவற்றையும் பென்ஃபீல்ட் கருத்தில் கொண்டார். ஆபரேஷனின்போது "நான் பிரட் டோஸ்ட்டின் வாசனையை நுகர்கிறேன்" என அலறினார். இது வலிப்பு தொடங்கும்முன் அவருக்கு ஏற்படும் வாசனை அனுபவம். குறிப்பிட்ட மூளைதிசுவை நீக்கியபின்பு அவருக்கு அந்த வாசனையும் வலிப்பும் ஏற்படவேயில்லை. இம்முறையில் பலன் கிடைக்க பாதி மூளை கூட அகற்றப்பட்டிருக்கிறது.

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்


பிரபலமான இடுகைகள்