க்ரைம் தியரிகள்!
க்ரைம் தியரிகள்!- விக்டர்
காமெஸி
நெற்றி சின்னதா? கஞ்சன்.
மூக்கு நீளமா? முன்கோபி. ஒல்லி கில்லியா? வஞ்சகன்; அமுல்பேபி
உடம்பா? அரிச்சந்திரன் என எத்தனை யூகங்கள். தியரிகள். உண்மையில் முகத்தை, உடலை
வைத்தே ஒருவரின் குணங்களை கண்டுபிடிக்க முடியுமா?
phrenology
வியன்னாவைச் சேர்ந்த
மரு.ஃபிராங்க் ஜோசப் கால், எவ்வளவோ முயற்சித்தும் தன் நண்பர்களின்
ஞாபகசக்திக்கு பக்கத்தில் கூட வரமுடியவில்லை. அப்போதுதான் அவர்களின்
முக அமைப்பை ஆராய்ந்து phrenology என்ற மண்டையோட்டு ஆய்வுமுறையை
கண்டுபிடித்தார். கபாலத்தின் சைஸ்,உறுப்புகளின்
அளவு ஆகியவற்றின் அளவு ஒருவரின் அன்பு,ஆக்ரோஷம்,குரூரம் ஆகியவற்றையும் முடிவு செய்கிறது என்ற
ஜோசப், மூளையை 27 பார்ட்டாக பிரித்தார்.
19 ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி,
அதன் மத்தியில் செல்வாக்கை இழந்த குற்ற ஆராய்ச்சி முறை இது.
DEGENERATION
1860 ஆம்
ஆண்டு குற்றவியல்துறையின் தந்தை என்ற அந்தஸ்து பெற்றவர், இத்தாலியைச்சேர்ந்த
டாக்டர் சீசர் லாம்ப்ரோசோ. ராணுவ டாக்டரான சீசர், தன் ஆயுள் முழுக்க கைதிகளை,இறந்தவர்களை சோதித்து வந்தவர்,
டார்வினின் பரிமாணவளர்ச்சி முறையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இறந்த திருடரின் உடலையும், வெட்டியான் ஒருவரின்
உடலையும் ஆராய்ந்தபோது, வெட்டியானின் தலையிலிருந்து சிறிய உள்தள்ளியிருந்த
பகுதி சீசரை ஈர்த்தது. பின் டஜன் கணக்கான கைதிகளை ஆராய்ந்து குடை
காதுகள்,பெரிய தாடைகள்,நீண்ட கன்னங்கள்,சிவந்த கண்கள் ஆகிய பழமையான அறிகுறிகளை தேடத்தொடங்கி அந்த ஆய்வுமுறைக்கு
DEGENERATION என பெயர் வைத்தார் டாக்டர் சீசர். 20 ஆம் நூற்றாண்டில் சீசரின் தியரி தோல்வியுற்றது.
டூரின் நகரிலுள்ள மியூசியத்தில் சீசர் தன் லைஃப் முழுக்க சேர்த்த கபால
ஓடுகளோடு அவரின் தலையையும் சேர்த்து வைத்துள்ளனர்.
XYY SYNDROME
1964 ஆம்
ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தவர் தன் மகனுக்கு செய்த மரபணு சோதனை மூலம் டவுன் சிண்ட்ரோம்
நோய் குறித்து அறிந்தார். அச்சிறுவனின் உடலில் கூடுதலாக ஒய் குரோமோசோம்
இருந்தது சோதித்த டாக்டருக்கே அதிர்ச்சி தந்தது. ஆயிரத்தில் ஒருவருக்கு
மட்டுமே XXY குரோமோசோம் இருக்கும். இந்த
குரோமோசோம்கள் இருப்பவர்கள் வன்முறை குணம் கொண்டவர்கள் என ஆய்வுகள் கூற, தொண்ணூறுகளில் இதுபற்றிய நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வெளியாயின.
ஆனால் அறிவியல் ஆய்வுகள் இதனை நிரூபிக்கவில்லை. மரபணு சோதனை செய்தால் மட்டுமே மூன்று குரோமோசோம் இருப்பதே தெரியவரும் நிலையில்
இந்த தியரி எப்படி அனைவருக்கும் பொருந்தும்.
தொகுப்பு: ரோஸ் பெர்ரோஸ், பெத்தீதா
நன்றி: முத்தாரம்