உங்கள் குழந்தை எப்படி இருக்கவேண்டும்?




Image result for baby illustration


சீனாவின் வளர்ச்சி!

ஜிடிபி வளர்ச்சி(2016)!

சீனா - 11.2 ட்ரில்லியன்(6.7%) இந்தியா - 2.45 ட்ரில்லியன்(7.%)

இரும்பு உற்பத்தி!

சீனா- 808 மி.டன்கள் இந்தியா -  95 மி. டன்கள்

சீனாவின் ரயில்கள் 250-350 வேகத்தில் 22 ஆயிரம் கி.மீ பயணித்து 34 நகரங்களை இணைக்கிறது. 2025 ஆம் ஆண்டில் 45 ஆயிரம் கி.மீ தூரம் ரயில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகருக்கு இடையிலான 1,318 கி.மீ தொலைவை அதிவேக ரயிலில்(HSR) 4.5 மணிநேரத்தில் அடையலாம்.

உற்பத்தியான கார்கள் - 28.02 மில்லியன் டன்கள்(சீனா), 4.5 மி.(இந்தியா)

விற்பனையான கார்கள் - 28.3 மி.டன்கள்(சீனா), 3.5 மி.டன்கள்(இந்தியா)
40 க்யூபிக் கி.மீ நீரைத் தேக்கும் அணைத்திட்டம் three Gorges 37 மில்லியன் டாலர் செலவில் பத்து ஆண்டுகளில் கட்டப்படவிருக்கிறது. இதன்மூலம் 1,600 கிராமங்கள், 13 நகரங்கள் பயன்பெறுகின்றன. நீளம் 2.3 கி.மீ. உயரம் 185 மீ.  

2

ரெயின்போ டைனோசர்!

வானவில் நிறத்தில் டைனோசர் ஒன்றை சீன விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். தோராயமாக வாத்தின் வடிவில் பளபள நிறத்தில் சிறகுகள் மற்றும் வாலுடன் டைனோசர் தலையுடன்  161 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வந்த உயிரினம் இது. "அற்புதமான பதப்படுத்துதல் முறையால் டைனோசரின் இறகுகளின் டீட்டெய்ல்களைக்கூட பார்க்க முடிகிறது" என ஆச்சரியம் குறையாமல் பேசுகிறார் சிகாகோவின் ஆராய்ச்சியாளர் சாட் இலியாசன்.

சீனாவின் ஹெபாய் பகுதியில் கண்டறியப்பட்ட இந்த டைனோசருக்கு விஞ்ஞானிகள் இதற்கு வைத்த பெயர் Caihong juji. அர்த்தம், வானவில் தலை. எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தபோது, இயற்கை நிறம் செல்களில் இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாது மைக்ரோராப்டர் எனும் நான்கு இறக்கைகள் கொண்ட டைனோசர்(40 மில்லியன் ஆண்டுகள்) இதேபோல இறகுகளின் வண்ணம் கண்டறியப்பட்டது. இதனை விட தற்போது கண்டறியப்பட்ட ரெயின்போ டைனோசர் தொன்மையானது."இதன் பண்புக்கூறுகள் சிறிது வித்தியாசமானவை. இதனை திட்டமாக பறவை என்றோ, விலங்கு என்றோ கூடு வகைப்படுத்த முடியாது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜூலியா கிளார்க்.

3


 கேன்சர் தீர்க்கும் ரத்தசோதனை!

எட்டு வகையான புற்றுநோய்களை தீர்க்கும் அட்வான்சான ரத்தசோதனையை ஜான் ஹாப்கின்ஸ் சிட்னி கிம்மல் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது நோயை தீர்க்காது என்றாலும் முன்பே கண்டுபிடித்தால் சிகிச்சையை தொடங்கி ஒருவரை காப்பாற்ற முடியுமே!

முதல்நிலை நோயாளிகளுக்கு 40 சதவிகித வெற்றி தந்துள்ள இச்சோதனையின் பெயர் CancerSEEK. "அறிகுறி தெரியாமல் நோய் தீவிரமாகிறது. இச்சோதனை மூலம் நோயை அட்வான்ஸாக கண்டுபிடித்து குணம் பெறலாம். நாங்கள் எட்டு புற்றுநோய்களை தொடர்ச்சியாக கவனித்து வருகிறோம்" என்கிறார் ஆராய்ச்சியாளரான நிகோலஸ் பாபடோபௌலோஸ்ஆயிரம் நோயாளிகளிடம் செய்த கேன்சர்சீக் டெஸ்டில் 70% அறிகுறிகளை கண்டறிய முடிந்தது. புற்றுநோய் சிகிச்சையில் இது முக்கியமான ஆராய்ச்சி என்பதில் சந்தேகமேயில்லை.  

4
உங்கள் குழந்தை எப்படி?

இன்று பத்து மாதம் பொறுமையாக இருந்து குழந்தையின் தோல் நிறம், ஜாடை, குணம், கருவிழி டிசைன் ஆகியவற்றை பார்க்க யாருக்கும் அவசியமில்லை. டென்வர் நகரைச் சேர்ந்த ஹியூமன் கோட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், பேபிகிளிம்ப்ஸ் என்ற டெஸ்ட்டை பெற்றோர்களின் அவசரத்திற்காகவே உருவாக்கியுள்ளது.

இதில் பெற்றோர் தங்கள் டிஎன்ஏ மூலம் தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருப்பார்கள் என்பதோடு என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள் என்பதைக்கூட அறியமுடியும். "மரபணு டெஸ்ட்டில் குழந்தையின் நோய்களை சொல்லி பயமுறுத்துவதை செய்ய விரும்பவில்லை. இது உங்கள் குழந்தையைப் பற்றிய ஜாலியான டெஸ்ட்" என புன்னகைக்கிறார் ஹியூமன் கோட் நிறுவனரான ஜெனிபர் லெஸ்காலட். "மக்கள் இதனை சிறிது கவனத்துடன் அணுகுவது நல்லது. குழந்தைகள் பற்றிய சரியான தகவல்களை தெரிந்துகொண்டாலும் அது குழந்தைகளைப்பற்றிய கவலைகளை உங்களுக்கு இன்றே ஏற்படுத்தி விடலாம்" என்கிறார் பொது மக்கள் நோய்தடுப்பு மையத்தின் இயக்குநர் மியூன்கோரி. குழந்தைகளின் கணித திறன், மூக்கின் நீளம், இசைத்திறமை பற்றி கால்குலேஷன்கள் போட்டு இயல்பாக ஆர்வம் காட்டும் விஷயங்களை முடக்கிவிடும் ஃப்யூச்சர் அபாயம் இதிலுள்ளது.

தொகுப்பு: கார்லோஸ் சமோசா, பெத்தீதா
நன்றி: முத்தாரம்










பிரபலமான இடுகைகள்