இதயமாற்று மருத்துவர்!

Image result for surgeon chris barnard


இதயமாற்று மருத்துவர்!

தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் பெர்னார்டு மருத்துவ வரலாற்றில் மறக்கமுடியாத மருத்துவர். எப்படி? 1967 டிச. 3 அன்று நோயாளிக்கு இதயமாற்று அறுவைசிகிச்சையை செய்த காரணத்தால்தான்.

 1969 ஆம் ஆண்டு நிலவில் கால்வைத்த சாதனைக்கு சமமாக இந்த முயற்சியை மருத்துவ உலகில் கருதுகிறார்கள். இதே இதயமாற்று முயற்சியில் பல மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தாலும், பெர்னார்டு பெற்ற மீடியா கவனம் வேறுயாரும் பெற்றிருக்கவே முடியாது. Groote Schuur மருத்துவமனையில் தன் மேலதிகாரிகளை அரும்பாடுபட்டு சமாளித்த டாக்டர் கிறிஸ், இதயமாற்று அறுவைசிகிச்சைக்கு ரெடியானார். லூயிஸ் வாஸ்கான்ஸ்கி என்ற நோயாளிக்கு பொருத்த ரெடியானாலும் கறுப்பினத்தவரிடமிருந்து இதயத்தை பெற்று பொருத்துவது அவர்களை சோதனையாக எலியாக பயன்படுத்துகிறார்கள்  என பேச்சு கிளம்பிவிடுமோ என மருத்துவர்கள் பயந்தனர்அப்போது டெனிஸ் டார்வால் என்ற வெள்ளையரின் இதயம் கிடைக்க, கிறிஸ் ஆபரேஷன் செய்து சாதனை படைத்தார். பின்னாளில் உலகறிந்த செலிபிரிட்டி மருத்துவராக மாறினாலும் சிறந்த இதய அறுவை சிகிச்சை வல்லுநராக செயல்பட்டார்.

-கோமாளிமேடை டீம்

பிரபலமான இடுகைகள்